அடர்த்தியான, உறுதியான கூந்தலைப் பெறுவதற்கு அன்றாட உணவுப்பழக்கங்களை மாற்றுவதன் மூலம் சிறந்த தீர்வினை பெறலாம். இதுகுறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்
நாம் அன்றாடம் பருகும் பானங்கள் சில கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது. அந்தவகையில், கேரட் சாறு பருகுவதன் மூலம் இளநரைகள் தடுக்கப்பட்டு, அடர்த்தியான, உறுதியான மற்றும் நீண்ட கூந்தலை பெறலாம். கேரட் சாற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் விற்றமின்கள் நிறைவாக உள்ளது இது கூந்தலுக்கு நிறைவான ஆரோக்கியத்தை வழங்குகின்றது. வெள்ளரி சாறு பருகுவதன் மூலம் உங்கள் உச்சந்தலை குளிர்ச்சியடைந்து கூந்தல் வறட்சி தடுக்கப்படுகிறது. வெள்ளரி சாற்றிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் விற்றமின்கள் நிறைவாக உள்ளது.
கற்றாழை சாற்றில் அதிகளவு விற்றமின் ஏ, சி மற்றும் ஈ உள்ளது. இது, உங்கள் தலைமுடியை அடர்த்தியாகவும் வலுவாகவும் மாற்றுவதற்கு உதவுகிறது. கீரை சாற்றில் இரும்புச்சத்து மற்றும் பயோட்டின் அதிகமாக உள்ளது. இது உங்கள் உடலுக்கு ஆக்ஸிஜனை வழங்க மற்றும் கடத்த உதவுகிறது.ஃபெரெடின் என்ற கலவையும் கீரை சாற்றில் உள்ளதுடன், இது புதிதாக தலைமுடி வளர்வதற்கு ஊக்குவிக்கிறது.