fbpx

ஆரோக்கியமாக வாழவேண்டுமா?… தினமும் 20 நிமிடம் பின்னோக்கி நடந்து செல்லுங்கள்!… ஆய்வும்! அறிவுறுத்தலும்!

வாரத்தில் சில நாட்கள் பின்னோக்கி நடைப்பயிற்சி மேற்கொள்வதால் உடலின் ஸ்திரத்தன்மை மற்றும் சமநிலையை மேம்படுத்துகிறது என்பது பல ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சி மேற்கொள்வது பெரும்பாலானோரின் அன்றாட வழக்கமாக இருக்கிறது .தினமும் ஒரே விதமாக நடிப்பயிற்சியை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும்போது சிலர்க்கு சலிப்பு ஏற்படும் அதை தவிர்க்க வாரத்தில் சில நாட்கள் பின்னோக்கி நடைப்பயிற்சியோ, ஜாக்கிங்கோ செய்யலாம். அவைகளை 20 நிமிடங்கள் செய்தால் கூட போதுமானது. அந்த பயிற்சிகளில் உடலுக்கும், மனதுக்கும் நலம் சேர்க்கும் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. பின்னோக்கி நடைப்பயிற்சி செய்வதன் மூலம் உடல் இயக்ககள் ஒருங்கிணைப்புடன் நடைபெறும். அதனால் உடல் நலம் பெரும் ஒட்டுமொத்த மனநிலையை மேம்படுத்தவும் உதவும். இரவில் சுழற்சி அடிப்படையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் தூக்கம் சீராக வரும்.சிந்தனை திறனை மேம்படுத்தும் .மனதில் நல்ல யோசனைகள் உதிர்க்க உதவும் .பார்வை திறனை மேம்படுத்த துணைபுரியும்.

முன்னோக்கி நடக்கும்போது புறத்தில் இருக்கும் தசைகள் எதுவும் அதில் ஈடுபடாது. ஆனால் பின்னோக்கி நடக்கும்போது கால்கள், நரம்புகள், தசைகள் என அனைத்துமே வலுமை பெறும். முழங்கால் காயங்களால் அவதிப்படுபவர்கள் பின்னோக்கி நடைபயிற்சி மேற்க்கொள்வது நல்லது. விரைவில் காயங்கள் குணமாகும். நடைப்பயிற்சியை முறையாக மேற்கொள்ளுவதற்கும் வழிவகை செய்யும். உடல் சமநிலையில் இருக்கவும் உதவி புரியும் அதிக கலோரிகளை எரிக்கவும் உதவும்.மேலும், பின்னோக்கி நடந்தால் முழங்கால் வலி அதிகம் இருக்காது. கால் வலியும் ஏற்படாது.

Journal of physical therapy science -ன் ஆய்வுகளின் அடிப்படையில், பின்னோக்கி நடப்பதால் மனதில் சமநிலை உருவாகிறது என்றும் எந்த சூழ்நிலையிலும் சமநிலையாகவும் தடுமாறாமல் முடிவுகளை எடுக்கவும் உதவுகிறது. மேலும் மகிழ்ச்சியாக வைத்திருக்கவும் நல்ல ஹார்மோன்களை வெளிப்படுத்தவும் உதவுகிறது.

Kokila

Next Post

இரவில் மொபைல் பார்த்துவிட்டு பகலில் அதிகம் தூங்குபவரா நீங்கள்!... ஆயுட்காலம் குறையும் ஆபத்து!...

Mon Feb 27 , 2023
இரவு நேரத்தில் 10 மணிக்கு மேல் மொபைல் பார்த்துவிட்டு பகலில் தூங்கினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து ஆயுட்காலம் குறையும் ஆபத்து ஏற்படும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை மொத்த மக்கள் தொகையில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஒரு நாளில் 6 மணி நேரத்துக்கும் அதிகமான நேரத்தை செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் கழிப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. குறிப்பாக, படுக்கைக்கு […]

You May Like