fbpx

உஷார்.. உங்கள் பான் கார்டு தவறாகப் பயன்படுத்தப்படலாம்.. மோசடியில் இருந்து எப்படி தப்பிப்பது..?

இந்தியாவில் பான் கார்டு மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். ஏனெனில் பான் கார்டு இல்லாமல் பெரிய நிதி பரிவர்த்தனைகள் எதையும் மேற்கொள்ள முடியாது.. அனைத்து முக்கிய நிதி பரிவர்த்தனைகளுக்கும், வரிகள் செலுத்தப்படுவதை உறுதிசெய்யவும் பான் எண் அதிகாரிகளுக்கு உதவுகிறது. ஆனால் மறுபுறம், பான் கார்டு மோசடியில் பலர் சிக்கித் தவிக்கின்றனர். அதாவது போலிக் கடன்களை, ஒரு சிலர் பான் எண்ணை தவறாக பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.. மேலும் சிலர் உங்கள் பான் கார்டை பயன்படுத்தி சட்டவிரோத பணப் பரிவர்த்தனை செய்யலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு குறிப்பிட்ட மதிப்பின் பரிவர்த்தனைக்கு, நகைக் கடைகளில் கூட பான் கார்டு அவசியம். எனவே உங்கள் பான் கார்டைப் பயன்படுத்தி நகைகளையும் வாங்கலாம். அதுமட்டுமின்றி மற்ற மோசடிகள், நிதிக் குற்றங்களுக்கும் பான் கார்டு பயன்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே உங்கள் பான் கார்டு தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதை தெரிந்துகொள்வது அவசியம்..

பான் கார்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை எப்படிச் சரிபார்ப்பது..? உங்கள் கிரெடிட் ஸ்கோரை சரிபார்ப்பதன் மூலம் உங்கள் பான் எண்ணில் வேறு யாராவது கடன் வாங்கியிருக்கிறார்களா என்பதை நீங்கள் எளிதாகச் சரிபார்க்கலாம். CIBIL, Equifax, Experian அல்லது CRIF High Mark போன்ற எந்தவொரு சேவைகளையும் பயன்படுத்தி உங்கள் பெயரில் எடுக்கப்பட்ட கடன்களின் விவரங்களைக் கண்டறியலாம். உங்கள் நிதி அறிக்கைகளை சரிபார்க்க Paytm அல்லது Bank Bazaar போன்ற fintech தளங்களுக்குச் செல்லலாம். உங்கள் பான் கார்டு விவரங்களுடன் பெயர், பிறந்த தேதி போன்ற உங்களின் தனிப்பட்ட விவரங்களை உள்ளிட்டால் போதும்.

பான் கார்டு மோசடியை எப்படி தவிர்க்கலாம்..?

  • உங்கள் PAN எண்ணை இடுவதற்கு முன், HTTPS என்ற முன்னொட்டைப் பயன்படுத்தவும். இணையதளம் பாதுகாப்பானாதா என்பதையும், மற்றும் பரிவர்த்தனை பாதுகாப்பானதா என்பதையும் இது காண்பிக்கும்.
  • நீங்கள் பான் கார்டின் நகலை வழங்கினால், அதை தவறாகப் பயன்படுத்த முடியாது என்பதை உறுதிப்படுத்த, தேதி மற்றும் நேரத்தை நகலில் எழுதவும்.
  • சரிபார்க்கப்படாத மற்றும் நம்பத்தகாத இணையதளங்களில் உங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதியை வழங்க வேண்டாம்.

பான் கார்டு மோசடி குறித்து எப்படி புகாரளிப்பது..?

  • முதலில், TIN NSDL இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
  • இப்போது ‘Customer Care’ என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், கீழ்தோன்றும் மெனுவில் உள்ள ”complaints/queries’ என்பதை கிளிக் செய்யவும்.
  • அதன் பிறகு உங்கள் தனிப்பட்ட விவரங்களை உள்ளிட்டு புகாரின் தன்மையை விவரிக்கவும்.
  • அதன் பிறகு, கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு படிவத்தை சமர்ப்பித்தால், உங்கள் புகார் பதிவு செய்யப்படும்.

Maha

Next Post

அடிதூள்.‌..! ஹோலி பண்டிகையை முன்னிட்டு 90 சிறப்பு ரயில்கள்...! மத்திய ரயில்வே அறிவிப்பு...!

Fri Feb 24 , 2023
இந்த ஆண்டு ஹோலி பண்டிகையை முன்னிட்டு 90 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்திய ரயில்வே பயணிகளின் வசதிக்காகவும், மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்படும் ஹோலியின் போது பயண நெரிசலைத் தவிர்க்கவும், தேசிய போக்குவரத்து நிறுவனம் நாடு முழுவதும் பல்வேறு ரயில் சேவைகளை இயக்க முடிவு செய்துள்ளது. வரவிருக்கும் பண்டிகைக் காலங்களில் பயணிகளின் கூடுதல் நெரிசலைக் குறைக்கும் விதமாக மத்திய ரயில்வே லோக்மான்ய திலக் […]

You May Like