fbpx

’மாணவர்களை கண்காணியுங்கள்’..!! ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவுபோட்ட பள்ளிக்கல்வித்துறை..!!

நூலக பாடவேளையில் வாசிப்பு இயக்க புத்தகங்களை மாணவர்களிடம் அளித்து அவர்கள் முறையாக வாசிக்கிறார்களா? என்பது கண்காணிக்கப்பட வேண்டும்.

பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், ”சிறு புத்தகங்களின் மூலமாக மாணவர்களுக்கு வாசிப்பின் மீது ஆர்வத்தை உண்டாக்கி தொடர் வாசிப்பை செயல்படுத்துவதே இதன் நோக்கமாகும். ஒரு கதை ஒரு புத்தகம் 16 பக்கங்கள் என்ற அடிப்படையில் இந்த புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, நூலக பாடவேளையில் வாசிப்பு இயக்க புத்தகங்களை மாணவர்களிடம் அளித்து அவர்கள் முறையாக வாசிக்கிறார்களா? என்பது கண்காணிக்கப்பட வேண்டும்.

மாணவர் வாசிப்புத் திறன் மேம்பாட்டில் உயரதிகாரி முதல் ஆசிரியர் நிலை வரை ஒரு கூட்டு நடவடிக்கை அவசியமாகிறது. வாசிப்பு இயக்கத்தின் நோக்கம், தேவை, கதை வாசிப்புக்கான நேரம், தலைமை ஆசிரியர் பணிகள் போன்ற வழிகாட்டுதல்கள் இந்த கையேட்டில் இடம் பெற்றுள்ளன. இதை தலைமை ஆசிரியர்கள் முழுமையாக படிக்க வேண்டும். இது தவிர 1 முதல் 12ஆம் வகுப்பு வரை வாசிப்பு இயக்கப் புத்தகத் தொகுப்புகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 முதல் 9 வரை உள்ள வகுப்புகளுக்கான கால அட்டவணையில் நூலக பாடவேளைகள் இருப்பது உறுதி செய்யப்படும் என்றும் இலக்கிய மன்ற செயல்பாடுகள், தமிழ் மற்றும் ஆங்கில மொழி சார்ந்த நடவடிக்கைகள் அனைத்திலும் வாசிப்பு இயக்க புத்தகங்கள் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆய்வு செய்ய முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : அரசுப் பணிகளில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு..!! வெளியான அதிரடி உத்தரவு..!!

English Summary

Are reading activity books provided to students during library lessons and are they reading properly? is to be monitored.

Chella

Next Post

Train Accident | விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி பயங்கர விபத்து..!! பயணிகளின் நிலை என்ன..?

Mon Jun 17 , 2024
A freight train collided with the Kanchanjunga Express in West Bengal's Darjeeling

You May Like