தமிழகத்தை ஆள வேண்டும் என்பது தான் நம் இலக்கு.. அதை இலக்காக கொண்டு பாஜக தொண்டர்கள் அனைவரும் கங்கனம் கட்டிக்கொண்டு செயல்பட வேண்டும் என நயினார் நாகேந்திரன் பாஜக தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணி அமைத்துள்ளது. தமிழகத்திற்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூட்டணியை உறுதி செய்தார். அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித் ஷா கூறியிருந்தார். இந்த நிலையில் பாஜகவின் கூட்டணி தொடர்பாக தொண்டர்கள் எந்த கருத்தும் தெரிவிக்கக்கூடாது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
விழுப்புரம் பாஜக தொண்டர்கள் சந்திப்பு கூட்டம் செங்கல்பட்டு பகுதியில் நடைபெற்றது. அதில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “ நாம் எதிர்பார்த்த மாதிரி அதிமுகவுடன் கூட்டணி அமைந்துள்ளது. பாஜக தொண்டர்கள் கூட்டணி தொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்க கூடாது. சமூக வலைதளங்களில் இது தொடர்பாக எழுதக்கூடாது” என்று கூறியுள்ளார்.
தேர்தல் கூட்டணியை பற்றி நாம் யாரும் பேச வேண்டிய அவசியம் இல்லை. உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களும் அண்ணன் இபிஎஸ் அவர்களும் பேசிக்கொள்வார்கள். இந்த கோட்டத்தில் மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பாஜகவினரும் பேச வேண்டாம். ட்விட்டர், பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க வேண்டாம். தமிழகத்தை ஆள வேண்டும் என்பது தான் நம் இலக்கு.. அதை இலக்காக கொண்டு பாஜக தொண்டர்கள் அனைவரும் கங்கனம் கட்டிக்கொண்டு செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
Read more: திருவள்ளூர் மாவட்டத்திற்கு புதுசா 5 திட்டங்கள்.. முதலமைச்சர் அறிவிப்பால் குஷியான மக்கள்..!!