Vinay Narwal: பஹல்காம் யங்கரவாதத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய கடற்படை லெப்டினன்ட் வினய் நர்வாலுக்கு டெல்லியில் அவரது மனைவி கண்ணீர் மல்க பிரியாவிடை அளித்தார் வீடியோ காண்போரை கண்கலங்க வைத்தது.
ஜம்மு-காஷ்மீரின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பிரபல சுற்றுலாத்தலமான பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்குப் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது ஈவு இரக்கமே இல்லாமல் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தக் கொடூரத் தாக்குதலில் வெளிநாட்டினர் 2 பேர் உள்ளிட்ட 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தக் கோரத் தாக்குதலில் இந்திய கடற்படையைச் சேர்ந்த அதிகாரி வினய் நர்வால், ஐதராபாத் உளவுப் பிரிவு அதிகாரி உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர்.
மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பரமேஸ்வரம், சந்துரு, பாலச்சந்திரா ஆகிய 3 பேர் காயமடைந்தனர். இதேபோல, கர்நாடகா உள்ளிட்ட தென்மாநிலங்களைச் சேர்ந்த 9க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் படுகாயம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ சீருடை அணிந்து வந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், இந்த தாக்குதலில் வீரமரணமடைந்த லெப்டினன்ட் வினய் நர்வாலுக்கு அஞ்சலி செலுத்த அவரது உடல் டெல்லி கொண்டு செல்லப்பட்டது. டெல்லி விமான நிலைய சரக்கு முனையத்தில் மலர்வளையம் வைக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து அவரது உடலுக்கு ராணுவ மரியாதை வழங்கப்பட்டது. இந்திய கடற்படையின் அனைத்து அதிகாரிகளும், வீரர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா, பா.ஜ.,வின் டெல்லி மாநிலத் தலைவர் வீரேந்திர சச்தேவா உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொண்டனர். மேலும் வினய் நர்வால் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் தியாகி லெப்டினன்ட் வினய் நர்வாலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அப்போது வினய் நர்வாலின் மனைவி மனைவி ஹிமான்ஷி தனது துணிச்சலான கணவரை வணங்கி கடைசியாக அவரைத் தொட்டு பிரியாவிடை அளித்தார். கணவரின் உடலைக் கட்டிப்பிடித்து அழுதார். பின்னர், தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, “என் வாழ்வில் நான் பார்த்த சிறந்த மனிதர் நீங்கள்தான். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். ‘நீங்கள் ஒரு புகழ்பெற்ற வாழ்க்கையை வாழ்ந்தீர்கள்,உங்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன், நாம் ஒன்றாகக் கழித்த நாட்கள் அனைத்தும் சிறந்தவை, இனி நான் எப்படி வாழ்வேன்,’ என்று கண்ணீர் மல்க கூறினார். அவரால்தான் நாங்கள் உயிருடன் இருக்கிறோம், அவரை நினைத்து ஒவ்வொரு நாளும் நாங்கள் பெருமைப்படுவோம்,” என்று உணர்ச்சியுடன் கண்ணீர் மல்க பிரியாவிடை அளித்தார்.
Readmore: தமிழகமே…! கிராம உதவியாளர்கள் பணியின்போது மரணம் அடைந்தால் வாரிசுகளுக்கு அரசு வேலை…! முக்கிய அறிவிப்பு