சாவர்க்கரைப் பற்றி பேசியதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.
நாக்பூரில் நடந்த சாவர்க்கர் கௌரவ யாத்திரையில் கலந்து கொண்டு பேசிய நிதின் கட்கரி, சில தவறான புரிதல்களால் தான் இந்த கருத்தை வெளியிட்டார் என்பதை ராகுல் காந்தி உணர வேண்டும் என்று தெரிவித்தார்.. மேலும் ராகுல்காந்தி தான் செய்த குற்றத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும் “ சாவர்க்கரை அவமதிக்க அவருக்கு யார் உரிமை கொடுத்தது? சாவர்க்கரை இழிவுபடுத்துவதை யாரும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்” என்று அவர் கூறினார்.. ஆனாலும் சாவர்க்கரின் வாழ்க்கையைப் பற்றி நாட்டிற்கு உணர்த்தியதற்காக ராகுல் காந்திக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார்..
இந்து சித்தாந்தவாதி சாவர்க்கரை ராகுல் காந்தி தொடர்ந்து கவிமர்சித்து வருகிறார்.. சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டதாக கூறி வருகிறார்.. அந்த வகையில் மோடி சமூகத்தை இழிவுப்படுத்தியதாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு சிறை தண்டனை கிடைத்தது.. இதையடுத்து அவர், மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.. பின்னர் செய்தியாளார்களை சந்தித்த அவர், தனது பெயர் சாவர்க்கர் அல்ல, காந்தி என்றும்ம், காந்தி யாரிடமும் மன்னிப்பு கேட்கமாட்டார்கள் ” என்று கூறியிருந்தார்.. இதை தொடர்ந்து பாஜக தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் ஆகியோர் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்..