fbpx

சென்னை| 11 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை…..! வானிலை ஆய்வு மையம் அலார்ட்…..!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று தமிழகம் புதுவை, காரைக்கால் போன்ற ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்காக வாய்ப்பு இருக்கிறது எனவும், கோவை, திருப்பூர், தேனி, நீலகிரி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி போன்ற மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்ததற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

நாளைய தினம் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் போன்ற இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல வரும் 3, 4 உள்ளிட்ட தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்கால் போன்ற இடங்களில் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று வரும் 5ம் தேதி தமிழகம், புதுவை, காரைக்கால் போன்ற இடங்களில் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கான வானிலை அறிவிப்பை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். நகரத்தின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியிலிருந்து 40 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியிலிருந்து 29 டிகிரி செல்சியஸ ஒட்டி இருக்கக்கூடும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

’கலக்கப்போவது யாரு’ புகழ் தீனாவுக்கு டும் டும் டும்..!! மணப்பெண் யார் தெரியுமா..? வைரலாகும் புகைப்படங்கள்..!!

Thu Jun 1 , 2023
விஜய் டிவியில் ஒளிபரப்பான ’கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான தீனாவுக்கு இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தீனா, சினிமா அல்லது தொலைக்காட்சியில் எப்படியாவது பெரிய ஆளாக வர வேண்டும் என்கிற எண்ணத்தில் சென்னை கிளம்பி வந்தவர். ஆரம்பத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ’கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் உதவி இயக்குநராக சில ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது இவரது டைமிங் வசனங்கள், நகைச்சுவை திறமையை கண்ட பலரும், […]
’கலக்கப்போவது யாரு’ புகழ் தீனாவுக்கு டும் டும் டும்..!! மணப்பெண் யார் தெரியுமா..? வைரலாகும் புகைப்படங்கள்..!!

You May Like