fbpx

வெயிலுக்கு ஓய்வு கொடுத்த வெதர் ரிப்போர்ட்….! காத்திருக்கும் கனமழை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து இருக்கின்ற வானிலை இன்று முதல் 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.

கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நீலகிரி போன்ற மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் போன்ற மாவட்டங்களிலும் கன மழை செய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் வரும் 5ம் தேதி வரையில் தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் விதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல தலைநகர் சென்னையில் இரு தினங்களுக்கு லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. என்று தெரிவித்து இருக்கின்ற வானிலை ஆய்வு மையம், சென்னையில் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகலாம் என்று கூறியுள்ளது

Next Post

உலகின் முதல் நாடாக ChatGPTக்கு தடை விதித்த இத்தாலி.. என்ன காரணம் தெரியுமா..?

Sun Apr 2 , 2023
தனியுரிமைக் காரணங்களுக்காக ChatGPTஐ தடை செய்த உலகின் முதல் நாடாக இத்தாலி மாறியுள்ளது. ChatGPT என்பது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மென்பொருளாகும்.. சமீப காலமாக இந்த ChatGPT உலகளவில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.. நாம் கூகுளில் ஒரு விஷயத்தை பற்றி தேடினால், அதை பற்றி பல்வேறு ஆப்ஷன்கள் நமக்கு கிடைக்கும்.. ஆனால் இந்த ChatGPT மூலம் தேடினால், நாம் என்ன தேடுகிறோமோ அதை பற்றிய விவரங்களை செயற்கை நுண்ணறிவு […]

You May Like