வார இறுதி நாட்கள் என்பதால் சென்னையிலிருந்து ஏராளமானோர் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் இன்றும், நாளையும் (டிச.6,7) சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 310 பேருந்துகள், கோயம்பேட்டிலிருந்து 80, மாதவரத்தில் இருந்து 30 என 420 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து அரசு போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வார இறுதி நாட்கள் (சனி, ஞாயிறு) என்பதால் சென்னையிலிருந்து ஏராளமானோர் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் இன்றும், நாளையும் (டிச.6,7) சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 310 பேருந்துகள், கோயம்பேட்டிலிருந்து 80, மாதவரத்தில் இருந்து 30 என 420 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றது.
ஞாயிறன்று ஊர் திரும்ப சிறப்பு பேருந்துகளும், பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க போதிய அலுவலர்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். வார இறுதி நாட்களில் பயணிக்க சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். பேருந்துகளை www.tnstc.in இணையதளம் மற்றும் tnstc செயலி மூலமாக முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.