பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் 1ஆம் தேதி மிகவும் பிரமாண்டமாக அறிமுகமானது. இந்நிகழ்ச்சி தொடங்கிய நாளில் இருந்து போட்டியாளர்கள் தமக்குள் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். செருப்பால் அடிப்பேன், மூக்கு உடைந்திடும் என பல சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகின்றனர்.
இது தவிர ஜோவிகாவுக்கும் விசித்திராவுக்கும் இடையில் படிப்பு பற்றிய விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் முதல் வாரத்திலேயே இத்தனை பஞ்சாயத்தா என ரசிகர்கள் ஆச்சரியத்தில் இருக்கின்றனர். மேலும், கமல்ஹாசன் வார இறுதியில் வந்தால் என்ன பேச போகிறார் என்றும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
இந்நிலையில், இந்த வாரம் மொத்தம் 7 போட்டியாளர்கள் நாமினேஷன் லிஸ்ட்டில் இருக்கின்றனர். பிரதீப், யுகேந்திரன், ஜோவிகா உள்ளிட்டோர் லிஸ்ட்டில் இருக்கும் நிலையில் முதல் வாரமே வெளியே போகப்போவது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பதிவாகியிருக்கும் வாக்குகளில் தற்போது குறைந்த அளவு வாக்குகள் பெற்றிருப்பது யுகேந்திரன் தானாம். அதனால், பிக்பாஸ் வீட்டிலிருந்து முதல் நபராக அவர் வெளியிருக்கிறார். இதுதொடர்பான வீடியோ நாளை (அக்.8) ஒளிபரப்பாக இருக்கிறது.