நேற்று பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தபோது ஒரு மணி நேரம் என்ன பேசினோம் என்பதை பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு அளித்தனர். மாநிலத் தலைவர் என்ற முறையில் காரில் பயணித்த அண்ணாமலை தன்னுடன் மோடி என்ன பேசினார் என்பதை பகிர்ந்துகொண்டுள்ளார்.
மாநிலத் தலைவர் என்ற முறையில் என்னை வாகனத்தில் பிரதமருடன் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. நிறைய கேள்விகள் கேட்டார். அதற்கு பதில் கூறினேன். அன்பும் பாசமும் நிறைந்த ஒரு தலைவர் பிரதமர் மோடி. எதைப் போன்ற விஷயங்களை மக்கள் கேட்கின்றார்கள் என்ன எதிர்பார்க்கின்றார்கள். என்பதைப் போன்ற விஷயங்களை கேட்டார்.
இந்நிலையில் கூட்டணி பற்றி பேசுவதற்கான நேரம் இது இல்லை.தேர்தல் பற்றி நேற்று பேசவில்லை. முன்னாள் மாநிலத்தலைவர் பொன்.ஆர். அவர்களும் நேற்று முதல்வருடன் பேசினார்கள். என்ன குறைகள் உள்ளது என பேசினார். கட்சியைப் பொறுத்தவரை அனைத்து பக்கமும் வளர வேண்டும். கொட்டும் மழையில் மக்கள் நின்று கொண்டு பிரதமருக்கு வரவேற்பளித்தனர். ஆக்கப்பூர்வமாக கட்சியை எடுத்து செல்ல வேண்டும் . என்பது போன்ற விஷயங்களை பேசினோம். என்றார்.