fbpx

என்ன நடந்தது!… கண்ணிமைக்கும் நேரத்தில் கேமரூன் கிரீன் விக்கெட்டை தட்டி தூக்கிய ஜடேஜா!… வைரலாகும் வீடியோ!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் 4-வது நாள் ஆட்டத்தின் 65 ஓவர்கள் முடிவில் ஆஸ்ரேலியா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்துள்ளது. இந்த போட்டியில் ஜடேஜா மிகவும் அருமையாக செயல்பட்டு வருகிறார் என்றே கூறலாம். ஏனென்றால், இரண்டாவது இன்னிங்சில் இதுவரை ஜடேஜா 3 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். குறிப்பாக நிதானமாக விளையாடி வந்த கேமரூன் கிரீன் விக்கெட்டையும் ஜடேஜா தான் வீழ்த்தினார். 62-வது ஓவரை ஜடேஜா வீச வந்த நிலையில், அந்த ஓவரை கேமரூன் கிரீன் தான் எதிர்கொண்டார். அந்த ஓவர் முழுவதுமே சற்று தடுமாறு கொண்டே தான் கேமரூன் கிரீன் இருந்தார். இறுதியாக அந்த ஓவரின் கடைசி பந்தில் கேமரூன் கிரீன் போல்ட் ஆகி வெளியேறினார்.

ஜடேஜா தனது அசத்தலான திறனை பயன்படுத்தி பந்தை சுழற்றி போல்ட் ஆக்கினார். போல்ட் ஆனதும் என்ன நடந்தது என்பது கூட தெரியாத அளவிற்கு பார்த்துக்கொண்டே கேமரூன் கிரீன் களத்தை விட்டு வெளியேறினார். இது தொடர்பான விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Kokila

Next Post

ஸ்மித்திற்காக ரசிகர்களை கையெடுத்து கும்பிட்ட நடுவர்!... ஏன் தெரியுமா?

Sun Jun 11 , 2023
ஷைட் ஸ்க்ரீனை சரிசெய்யும் படி ரசிகர்களை நோக்கி கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொண்ட நடுவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் […]

You May Like