fbpx

வானில் பறக்கும்போது விமான சக்கரங்கள் உள்ளே செல்லாவிட்டால் என்ன ஆகும்..? திக் திக் தகவல்..!!

திருச்சியில் இருந்து சார்ஜாவுக்கு 141 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்க முடியாமல் கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கும் மேலாக வானத்தில் வட்டமடித்த நிலையில், விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதுமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விமான சக்கரங்கள் உள்ளே செல்லாவிட்டால் என்ன ஆகும்..?

விமானம் மேலே எழும்பியதும், அதன் சக்கரங்கள் உள்ளே செல்லாவிட்டால் என்ன நடக்கும் என்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த முன்னாள் விமானப்படை அதிகாரி ராம் பதிலளித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ”விமானம் வானில் பறக்கும்போது, அதன் சக்கரங்கள் உள்ளே செல்லாவிட்டால், விமானம் சீராக பறப்பதில் சிக்கல் ஏற்படும். காற்றின் எதிர்ப்பு சக்தி காரணமாக, விமானம் இழுக்கப்படுவதால் விமானம் தொடர்ந்து பறக்க அதிக எரிபொருள் தேவைப்படும்.

இதனால், விமானம் செல்ல வேண்டிய இடத்திற்கு முன்னதாகவே எரிபொருள் தீர்ந்து விடும் நிலை நேரிடும். இந்த ஆபத்தை தவிர்க்க வேண்டியே, அதீத முன்னெச்ரிக்கை நடவடிக்கையாக விமானம் புறப்பட்ட இடத்திலேயே தரையிறக்கச் செய்யப்படும். இதுவே, சென்னை – மதுரை, சென்னை – கோவை போன்ற குறுகிய தூர விமானம் என்றால் பெரியளவில் பிரச்சனை இன்றி விமானத்தை சேருமிடம் நோக்கி இயக்கிவிடலாம்.

ஆனால், திருச்சி – ஷார்ஜா போன்ற தொலைதூர விமானங்களில் அது சாத்தியமில்லை என்பதால் ஆபத்தை தவிர்க்க வேண்டிய இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன” என்று விளக்கம் அளித்தார்.

Read More : மூதாதையர்கள் பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்பட்ட தம்பதி..!! டிஎன்ஏ பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி முடிவு..!!

English Summary

Asked what happens when the plane takes off and its wheels don’t go in, former Air Force officer Ram answers.

Chella

Next Post

Viral Video | யாரு பெருசுன்னு அடிச்சு பார்க்கலாமா..? முடியை பிடித்து தரதரவென இழுத்துச் சென்ற மாணவிகள்...! பரபரப்பு வீடியோ..!!

Sat Oct 12 , 2024
They took turns fighting as one student grabbed the other and fell down in groups.

You May Like