ஒரு நாளைக்கு அனைவரும் மூன்று முறை சாப்பிடுவது வழக்கம். ஆனால் சில காரணங்களினால் ஒரு வேலை உணவையாவது தவிர்த்து விடுகின்றனர். இன்னும் சிலர் மூன்று வேலை உணவுகளையுமே ஒழுங்காக சாப்பிடுவதில்லை. இதனால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது.
நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவில் இருந்து தான் கிடைக்கிறது. இதனை நாம் ஒழுங்காக உட்கொள்ளவில்லை என்றால் உடலானது பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறது. உடலில் என்னென்ன ஆரோக்கிய பிரச்சனைகள் வரக்கூடும் என்பதை பார்ப்போம்.
ஒரு வேலை சாப்பிடாமல் இருந்தால் கூட மூளையானது நமது பேச்சை கேட்காது. எதை பார்த்தலும் வெறுப்பாகவும் கோபமாகவும் இருக்கும். உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்காமல் இருக்கும் நேரத்தில் உடலானது முழு ஆற்றலையும் இழந்து கோபமும் எரிச்சலும் உண்டாகும்.
உணவை சாப்பிடாமலோ அல்லது குறைவாகவோ சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள கார்டிஸோல் ஹார்மோன் அதிகமாக சுரக்க ஆரம்பிக்கிறது. கார்டிஸோல் ஹார்மோனின் அளவு அதிகரிப்பதால் உடல் எடை அதிகரிப்பதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைகிறது.
தினமும் ஒழுங்காக சாப்பிடாமல் இருப்பதன் மூலம் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. அதாவது, நீங்கள் குறைவான அளவில் சாப்பிட்டு வருவதால் நாளடைவில் உங்கள் ஊட்டச்சத்தின் அளவு குறைந்து உடல் வலிமையற்று காணப்படுகிறது.
தொடர்ந்து உணவை சாப்பிடாமல் இருப்பதால் உடலில் மெட்டபாலிசத்தின் அளவு பாதிக்கப்படுகிறது. இதனால் உடல் எடை குறைய தொடங்குகிறது. குறிப்பாக காலை உணவையும், இரவு உணவையும் தவிர்ப்பதன் மூலம் உடலில் உள்ள ஒட்டுமொத்த மெட்டபாலிசமும் பாதிக்கப்படுகிறது.