Digital census: நாட்டில் ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கடைசியாக கடந்த 2011ம் ஆண்டில் நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது நடந்தது. இந்தநிலையில், அரசு 2025 ஆம் ஆண்டு டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த உள்ளது. இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பிலிருந்து வேறுபட்டதாக இருக்கும். 2021ம் ஆண்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் கொரோனா பரவல் இருந்ததால் மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது நடக்கவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி தொடர்ந்து தாமதப்பட்டு வருகிறது.
உண்மையில், 2011 இல் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில், மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் மக்களின் வீடுகளுக்குச் சென்று குடும்ப உறுப்பினர்களைப் பற்றிய தகவல்களை சேகரித்தனர். ஆனால் இந்த முறை அது நடக்காது. இம்முறை இப்பணி டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படும். டிஜிட்டல் மக்கள்தொகை கணக்கெடுப்பு எவ்வாறு நடத்தப்படும், அதில் மக்கள் எவ்வாறு கணக்கிடப்படுவார்கள் என்பது குறித்து பார்க்கலாம்.
இது தொடர்பாக ஊடகங்களில் வரும் செய்திகளின்படி, ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் ஒவ்வொரு இந்திய குடிமகனும் ஒரு படிவத்தைப் பெறுவார்கள், அதில் அவர்கள் சரியான தகவல்களை நிரப்ப வேண்டும். இதற்குப் பிறகு இந்தப் படிவம் இந்தியப் பதிவாளர் ஜெனரல் (ORGI) அலுவலகத்திற்கு அனுப்பப்படும். இது தரவை விரைவாகக் பெறமுடியும் என்று நம்பப்படுகிறது.
நாட்டில் இன்னும் பல கிராமங்களில் இணையம் கிடைக்காத அல்லது மிகவும் மெதுவாக உள்ளது. இது தவிர, பல இடங்களில் ஸ்மார்ட்போன்களை எப்படி பயன்படுத்துவது என்று தெரியவில்லை. அப்படியானவர்கள் எப்படி இந்த டிஜிட்டல் கணக்கெடுப்பில் பங்கேற்பார்கள் என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. இது குறித்து அரசு இன்னும் தெளிவுபடுத்தவில்லை. ஆனால், 2011ம் ஆண்டு போல், இன்டர்நெட் இல்லாத அல்லது ஸ்மார்ட்போன் பயன்படுத்தத் தெரியாத இடங்களில், மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் அங்கு சென்று தரவுகளை சேகரிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.