fbpx

தமிழ்நாடு சட்டமன்ற நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்வதில் என்ன பிரச்சனை..? சென்னை ஐகோர்ட் கேள்வி..!!

சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில் இன்று மீண்டும் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயகாந்த் மறைந்த விவரம் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல சட்டப்பூர்வமான பிரதிநிதி மூலமாக இந்த வழக்கை தொடர இருப்பதாகவும் விளக்கம் கொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் தமிழ்நாடு அரசை பொறுத்தவரையில் சட்டமன்றத்தில் கேள்வி நேரம், கவன ஈர்ப்பு தீர்மானங்கள் மீதான விவாதங்கள், ஆளுநர் உரை, பட்ஜெட் உரைகள், அமைச்சர்களுடைய பதிலுரைகள் தற்போது நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.

அதே போல் சட்டமன்றத்தில் உறுப்பினருடைய பேச்சுகள் அவை குறிப்புக்கள் நீக்கப்படும் போது அவை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட வாய்ப்புள்ளதால் அந்த நடவடிக்கை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வாய்ப்பு இல்லை என்றும் அரசு தெரிவித்தது. இதனை கேட்ட நீதிபதிகள், நாடாளுமன்றத்தில் அனைத்து நடவடிக்கைகளும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதேபோல, தமிழக சட்டமன்ற நடவடிக்கைகளை முழுவதுமாக நேரடி ஒளிபரப்பு செய்வதில் என்ன பிரச்சனை உள்ளது? அதுமட்டுமல்லாமல் இந்த விவகாரம் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

Chella

Next Post

பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் '1000' புள்ளிகளுக்கு மேல் சரிந்து, நிஃப்டி 21,300-க்கு கீழே சரிந்தது.!

Tue Jan 23 , 2024
பங்குச் சந்தையின் இன்றைய வர்த்தகம் வீழ்ச்சியை கண்டிருக்கிறது. பம்பாய் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் சென்செக்ஸ் 1,053.10 புள்ளிகள் சரிந்து 70,370.55 ஆகவும், நிஃப்டி 330.15 புள்ளிகள் சரிந்து 21,241.65 ஆகவும் இருந்தது. பங்குச்சந்தையின் இந்த திடீர் வீழ்ச்சியால் சன் ஃபார்மா ஏர்டெல் மற்றும் பவர் கிரிட் ஆகிய நிறுவனங்களின் புள்ளிகள் சென்செக்ஸ் ஏற்றம் கண்டுள்ளன. அதே நேரம் ஹெச்டிஎஃப்சி வங்கி ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் ஹெச்யுஎல் ஆகியவை வீழ்ச்சியை கண்டிருக்கிறது. நிஃப்டியில் […]

You May Like