fbpx

’நிதியமைச்சர் கூறியதில் உண்மையில்லை’..! ஜிஎஸ்டி கூட்டத்தில் நடந்தது இதுதான்..! அமைச்சர் பிடிஆர்

ஜிஎஸ்டி வரி குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதில் உண்மையில்லை” என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

உணவுப் பொருட்கள் மீதான 5% ஜிஎஸ்டி வரி தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களின் ஒப்புதலுடன் உயர்த்தப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதில் முழு உண்மையில்லை என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “சண்டிகரில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அப்போது, 56 பொருட்களுக்கு வரி தொடர்பாக பரிந்துரைகள் அளிக்கப்பட்டன.

’நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதில் உண்மையில்லை’..! ஜிஎஸ்டி கூட்டத்தில் நடந்தது இதுதான்..! அமைச்சர் பிடிஆர்

அந்த 56 பொருட்களுக்கான பரிந்துரைகளையும் ஒரே வாக்கில் ஆம் அல்லது இல்லை என்று தேர்வு செய்ய வேண்டும். அந்த சூழலில் 56 பொருட்களையும் கலந்துரையாடி தேர்ந்தெடுப்பதற்கு போதிய நேரமில்லை. மேலும், ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக கலந்துரையாடி தேர்வு செய்வதற்கான வழிவகையும் கொடுக்கவில்லை. ஆகையால், மொத்தமாக 56 பொருட்களுக்கும் ஒன்றாக சேர்த்து ஒப்புதல் அளித்தோம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

மனைவி வந்தால் தான் கீழே இறங்குவேன் செல்போன் டவர் மீது ஏறி நின்று அடம்பிடித்த கொத்தனார்..!

Thu Aug 4 , 2022
சென்னை திருவொற்றியூர் சிவசக்தி நகரில் வசித்து வருபவர் செந்தில்குமார் (39). கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வடிவுக்கரசி(37). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் செந்தில் குமார், குடித்து விட்டு வந்து மனைவியை சந்தேகப்பட்டு சண்டை போட்டுள்ளார். இதனால் கடந்த மாதம் அவரது மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் செந்தில் குமார் மாமனார் வீட்டிற்கு சென்று பலமுறை மனைவியை […]

You May Like