fbpx

பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு..!! டைம் நோட் பண்ணிக்கோங்க..!! வெளியான முக்கிய தகவல்..!!

பள்ளி ஆசிரியர்கள் எத்தனை மணிக்கு பணிக்கு வர வேண்டும்? பள்ளி வேலை நேரம் என்ன? என்பன குறித்த கேள்விகளுக்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் விவரங்கள் பெறப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் மலைக் கொழுந்தன், கரூர் மாவட்டத்தில் இருந்து சில கேள்விகளை முன்வைத்து மனு அளித்திருந்தார். அதற்கு மாவட்டக் கல்வி அலுவலர் பதில் அளித்துள்ளார். அதில், “காலை 9.00 மணி முதல் மாலை 4.10 மணி வரை தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் வேலை நேரம் செயல்படுகிறது.

தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் காலை 8.45 மணிக்கும், ஆசிரியர்கள் காலை 9.00 மணிக்கும் பள்ளிக்கு வருகை தர வேண்டும்” (காலை உணவுத் திட்டத்தால் தற்போது நேரம் மாற்றப்பட்டு உள்ளது) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல்நிலைப் பள்ளிகளின் வேலை நேரம் என்ன..?

* உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் காலை 9.15 மணிக்கு பள்ளிக்கு வருகை தர வேண்டும்.

* உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் காலை 9.00 மணிக்கும், உடற்கல்வி ஆசிரியர்கள் காலை 8.45 மணிக்கும் பள்ளிக்கு வர வேண்டும்.

* உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் வேலை நேரம் காலை 9.20 மணி முதல் மாலை 4.20 வரை ஆகும்.

உள்ளூர் சூழல்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம்

* உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் கழகம், ஆசிரியர்கள் குழுவின் தீர்மானம் மற்றும் உயர் அலுவலர்களின் ஒப்புதல் பெற்று வேலை நேரத்தை மாற்றிக்கொள்ள முடியும்.

ஆர்டிஇ எனப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், இந்த விவரங்கள் பெறப்பட்டுள்ளன. கரூர் மாவட்டக் கல்வி அலுவலரும் பொதுத் தகவல் வழங்கும் அலுவலருமான அதிகாரி இந்த விவரங்களை அளித்துள்ளார்.

Read More : மீண்டும் தொட முடியாத தூரத்திற்கு செல்லும் தங்கம்..!! ஒரே நாளில் அதிரடி உயர்வு..!! நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!!

English Summary

What time do school teachers have to come to work? What are the school working hours? For queries, details have been obtained under the Right to Information Act.

Chella

Next Post

வலியால் கதறி துடித்த 5 வயது சிறுமி..!! ஓவிய ஆசிரியரால் தீவிர சிகிச்சை..!! பள்ளியில் வைத்து பலாத்காரம்..!!

Wed Aug 14 , 2024
The girl also told her mother that her private part was painful. Shocked to hear this, the mother took him to a nearby hospital.

You May Like