fbpx

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. உயர் நீதிமன்ற வளாகத்தில் அது நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்..? – ஹைகோர்ட் கேள்வி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செய்யப்பட்டவர்கள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனு விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஹெச்.எம். சுப்பிரமணியம், ஜோதி ராமன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் குமரேஷன் ஆஜரானார்.

அப்போது, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டு கைமாற்றப்பட்டது என்ற அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்தார். இதைக் கேட்ட நீதிபதிகள், உயர்நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு எப்படி கொண்டுவரப்பட்டது என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், இது தொடர்பாக தனியாக விசாரணை நடத்தவும் போலீசாருக்கு உத்தரவிட்டனர். இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டுவரப்பட்ட சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் வெடிகுண்டு வெடித்து இருந்தால் என்ன மாதிரியான விளைவு ஏற்பட்டு இருக்கும் என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

அதுமட்டுமின்றி நீதிமன்ற வளாகத்திற்குள் வெடிகுண்டு எப்படி கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்திற்கு வருபவர்களை சோதனையிடுவது என பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற பாதுகாப்பை பலப்படுத்த பரிந்துரைகளை அளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அம்பேத்கர் சிலை அருகே விரும்பத் தகாத சம்பவம் நடந்திருந்தால் என்னவாயிருக்கும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Read more :இந்த 7 இடங்களில் வாசனை திரவியங்கள் தடவாதீர்கள்!. சருமத்தில் தொற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம்!. தடுப்பது எப்படி?

English Summary

What would have happened if a bomb exploded inside the Chennai High Court premises?

Next Post

சென்னை ஐகோர்ட்டுக்குள் வெடிகுண்டு..!! வெடித்திருந்தால் என்ன பண்ணுவீங்க..? கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா..? நீதிபதிகள் காட்டம்

Mon Jan 27 , 2025
One must think about what kind of consequences would have occurred if the bomb brought into the High Court premises had exploded.

You May Like