fbpx

வாட்ஸ்அப் அட்மின் தான் பொறுப்பு…! போலி செய்திகள் பரப்பினால் 3 ஆண்டு சிறை…! மத்திய அரசு புதிய சட்டம்…!

இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் போலி செய்திகள் பரப்பினால் 3 ஆண்டு சிறை தண்டனை.

ஒருவர் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் வாட்ஸ்-அப் செயலி மூலம் ஒருவரை எளிதில் தொடர்பு கொள்ளலாம் என்பதாலேயே, உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. வாட்ஸ்அப், பிற செயலிகளைப் போன்று இல்லாமல், இளைஞர்களுக்கு மட்டுமின்றி அனைத்து வயதினரும் பயன்படுத்தும் வகையில் உள்ளது.

உலக அளவில் கோடிக்கணக்கான பயனாளர்களை வைத்திருக்கும் வாட்ஸ்அப் கடந்த 2009-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்நிலையில் அந்த செயலில் பல்வேறு புதிய புதிய அப்டேட்களை கொடுத்து வருகிறது தகவல் பரிமாற்றத்தில் வாட்ஸ்அப் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. முக்கியமாக வாட்ஸ் அப்பில் குரூப் உருவாக்கி அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட குழுவினருக்கு அதிக அளவிலான செய்தி பகிரப்பட்டு வருகிறது. இந்தியாவில் வாட்ஸ் அப் குரூப்-களில் பகிரப்படும் போலி செய்திகளை தடுப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு துவங்கியுள்ளது. இதற்கான புதிய மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

பாரதிய நாய சனிதா மசோதா, 2023-ன்‌ படி, இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ‘போலி செய்திகள் அல்லது தவறான தகவல்களை’ பரப்புபவர்களுக்கு பிரிவு 195-ன் கீழ் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். பிரிவு 195 (1) d யின் படி, இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு அல்லது பாதுகாப்பிற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் போலியான அல்லது தவறான தகவல்களை வெளியிட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

Vignesh

Next Post

கனடாவில் இந்து கோவில் சேதம்...! காலிஸ்தானியர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு...!

Sun Aug 13 , 2023
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள இந்து கோவில் அதன் முன் வாயில் மற்றும் சுவரில் காலிஸ்தானிக்கு ஆதரவான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரே நகரில் உள்ள லட்சுமி நாராயண் மந்திரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சமிபத்தில் கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள மற்றொரு இந்து கோவில் இந்தியாவிற்கு எதிரான சுவரொட்டிகளால் சிதைக்கப்பட்டதை அடுத்து இந்த சம்பவம் நடந்துள்ளது. லக்ஷ்மி நாராயண் […]

You May Like