Social media: மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மெசஞ்சர் ஆகியவை ஒரு சில தொடர்பாடல் சாதனங்களில் உலகளாவிய செயலிழப்பை சந்தித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதுதொட்ர்பாக ஆன்லைன் செயலிழப்பைக் கண்காணிக்கும் தளமான Downdetector-ன் படி, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் நேற்று வெள்ளிக்கிழமை வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் செயலிழந்ததாக கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 4000 க்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் புகார்கள் மற்றும் இந்தியாவில் 10,000 க்கும் அதிகமான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த பிரச்சினைகள் குறித்து மெட்டா நிறுவனம் இன்னும் எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை. அமெரிக்காவில் ஃபேஸ்புக் மெசஞ்சர் குறித்த 1000 க்கும் மேற்பட்ட புகார்கள் எழுந்தன.
இதேபோல் இங்கிலாந்தில் வாட்ஸ்அப் பற்றிய 7500 க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவானது. Downdetector mapபடி, லண்டன், மான்செஸ்டர் மற்றும் கிளாஸ்கோ ஆகியவை மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் காட்டியது. புகார்கள் செய்தவர்களில், 59% பேர் செய்திகளை அனுப்ப முடியவில்லை என்று கூறினார்கள். மற்ற 22% பேர் சர்வர் இணைப்பு பிரச்சனைகளை எதிர்கொண்டனர், மற்றும் மீதமுள்ள 19% பேர் செயலியில் பிரச்சனைகள் இருந்ததாக தெரிவித்தனர்.
சோஷியல் மீடியா பயனர்கள், மெட்டா செயலிகளில் செய்திகளை அனுப்புவதில் பிரச்சனைகள் எதிர்கொண்டு வருவதாக கூறினர். “உங்கள் Airplane mode ஆன்/ஆஃப் செய்வதை நிறுத்துங்கள். உங்கள் வாட்ஸ்அப்பைப் புதுப்பிப்பதை( ரீஃபிரெஷ்) நிறுத்துங்கள். அது உங்கள் நெட்வொர்க் பிரச்சனை அல்ல, வாட்ஸ்அப் செயலிழந்துவிட்டது,” என்று ஒரு பயனர் X- இல் பதிவிட்டார். “யாரோ ஒருவர் என்னிடம் வங்கி விவரங்களை கேட்ட பிறகு Whatsapp செயலிழந்தது,” என்று மற்றொருவர் மேலும் கூறினார். “WhatsApp உண்மையில் செயலிழந்துவிட்டதா அல்லது அது என்னுடைய நெட்வொர்க் பிரச்சனையா என்று பார்க்க X தளத்தை பார்வையிட்டேன் என்று மூன்றாவது நபர் ட்வீட் செய்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பரில், வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல மெட்டா பயன்பாடுகள் உலகளாவிய செயலிழப்பை சந்தித்தன. இது உலகளவில் மில்லியன் கணக்கான பயனர்களைப் பாதித்தது. மெதுவாக ஏற்றப்படும் நேரம், கருத்துகள் சிக்கல்கள் மற்றும் முழுமையான அணுகல் இல்லாமை போன்ற சிக்கல்களை பயனர்கள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர்களிடம் மெட்டா மன்னிப்பு கேட்டு, முடிந்தவரை விரைவாக விஷயங்களை இயல்பு நிலைக்குக் கொண்டுவர அவர்கள் பணியாற்றி வருவதாகக் கூறியது.
பின்னர் Downdetector.com பேஸ்புக் பற்றி 105,000 க்கும் மேற்பட்ட புகார்களையும், இன்ஸ்டாகிராம் தொடர்பான 70,000 புகார்களையும், வாட்ஸ்அப் தொடர்பான 12,000 க்கும் மேற்பட்ட புகார்களையும் தெரிவித்தது.
Readmore: செம சான்ஸ்…! 20,000 பேருக்கு வேலை வாய்ப்பு… வரும் 8-ம் தேதி நடக்கும் மாபெரும் சிறப்பு முகாம்…!