உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப் பயன்படுத்துகின்றனர். இது பயனர்களுக்கு வாழ்க்கையை எளிதாக்க பல்வேறு சேவைகள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்குகிறது. தகவல் தொடர்பு, கல்வி, வணிகம் மற்றும் பல போன்ற அனைத்து வகையான தேவைகளுக்கும் இது பயன்படுத்தப்படுகிறது.
வாட்ஸ்அப் சமீபகாலமாக பயனர்களுக்கு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இருப்பினும், வாட்ஸ்அப் நிறுவனம் வழங்கிய புதுப்பிப்புகளின் காரணமாக இந்த அம்சங்களில் சில பழைய போன்களில் வேலை செய்யவில்லை.
ஐபோன் 5, ஐபோன் 5சி, கிராண்ட் எஸ் பிளஸ் போன்ற முக்கிய ஸ்மார்ட்போன்கள் உட்பட 49 போன்களில் வரும் 31ம் தேதி முதல் வாட்ஸ் அப் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.