fbpx

’பள்ளி, கல்லூரிகளில் நான் படிக்கும்போது ஜஸ்ட் பாஸ் தான் ஆவேன்’..!! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஓபன் டாக்..!!

பள்ளி, கல்லூரிகளில் நான் படிக்கும் போது அனைத்து பாடங்களிலும் ஜஸ்ட் பாஸ் தான் ஆவேன் என உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில், தமிழக அரசு சார்பில் சென்னையில் இலக்கியத் திருவிழா நடைபெறுகிறது. இதில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “பள்ளி, கல்லூரிகளில் நான் படிக்கும் போது அனைத்து பாடங்களிலும் ஜஸ்ட் பாஸ் தான் ஆவேன். ஆனால், தமிழில் மட்டும் 85, 90 மதிப்பெண்கள் எடுத்துவிடுவேன். எனக்கு இயல்பாகவே தமிழ் மீது ஆர்வம் உண்டு. மேலும், கலைஞர் கருணாநிதியின் பேச்சு, எழுத்து தான் இதற்கு முக்கிய காரணம். முரசொலியை படித்து தான் எனது தமிழ் ஆர்வத்தை அதிகப்படுத்திக் கொண்டேன்.

’பள்ளி, கல்லூரிகளில் நான் படிக்கும்போது ஜஸ்ட் பாஸ் தான் ஆவேன்’..!! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஓபன் டாக்..!!

முன்காலங்களில் நூலகம் என்றாலே பழமையான கட்டிடம் தான் நமது சிந்தனைக்கு வரும். அப்படிப்பட்ட மனநிலையை மாற்றியவர் கருணாநிதி. சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டை முன்னிட்டு உருவாக்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகம் தமிழகத்தை அறிவு தளத்தில் ஒரு படி மேலே உயர்த்தியது. இன்று அதேபோல், தென் தமிழகத்தில் மதுரையில் அறிவு மாற்றத்திற்காக ரூ.115 கோடியில் மிகப்பெரிய நூலகம் ஒன்றை உருவாக்கி வருகிறார் முதல்வர் முக.ஸ்டாலின். விரைவில் அந்த நூலகம் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இதே போன்று திமுக இளைஞரணி சார்பில் இளைஞரணி அலுவலகமான அன்பகத்தில் ஒரு சிறிய நூலகத்தை உருவாக்கி உள்ளோம். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை உள்ளடக்கியுள்ள அன்பகம் நூலகத்தை ஆர்வமுள்ள இளைஞர்கள் யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதே போன்று எனது சொந்த தொகுதியான சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் ஒரு நூலகம் மற்றும் நடமாடும் நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது” என்றார்.

Chella

Next Post

லோகேஷ் கனகராஜின் LCU-வில் இணைகிறார் பொன்னியின் செல்வன் நடிகர்..!! அவரே சொன்ன முக்கிய தகவல்..!!

Wed Jan 4 , 2023
தமிழ் சினிமாவில் தற்போது டிரெண்டிங்கில் உள்ள இயக்குனர் என்றால் அது லோகேஷ் கனகராஜ் தான். கோலிவுட் முதல் பாலிவுட் வரை இவரின் கால்ஷீட்டுக்காக முன்னணி நடிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர். வெறும் 4 படங்களே இயக்கியிருந்தாலும், அவை அனைத்துமே தரமான படங்களாக கொடுத்து மக்களை கவர்ந்தார் லோகேஷ். மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது விஜய்யை வைத்து தளபதி 67 படத்தை இயக்கி வருகிறார். […]

You May Like