fbpx

நான் சின்ன வயசா இருக்கும்போதே அந்த மாதிரி செஞ்சாங்க….! சிறுவயது சம்பவத்தை ஞாபகப்படுத்தி ஜான்வி கபூர் வேதனை….!

1980 காலகட்டத்தில், தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. இவர் பிற்காலத்தில் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு, அதன் பிறகு மெல்ல, மெல்ல சினிமாவில் இருந்து ஒதுங்க தொடங்கினார். ஆனால், திருமணத்திற்கு பிறகும் ஒரு சில முக்கிய கதாபாத்திரங்களில் பல திரைப்படங்களில் அவர் நடித்திருந்தார் என்பது இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது.

ஆனால், போனிக்கபூரும் சரி, ஸ்ரீதேவியும் சரி சினிமா துறையில் தனிப்பெரும் சாம்ராஜ்யத்தை நிலை நிறுத்தியவர்கள். அவர்களுக்கு மூத்த மகளாக பிறந்தவர் தான் ஜான்வி கபூர். அவருக்கு தற்போது 26 வயதாகிறது. இந்த நிலையில், தற்போது அவர் தனக்கு சிறு வயதில் நடந்த ஒரு கசப்பான சம்பவத்தை பற்றி தெரிவித்து, வேதனை கூறியிருக்கிறார். இது  சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் தன்னுடைய சிறுவயதில் அவருடைய புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டது குறித்து மனம் திறந்து உள்ளார். அதாவது, தன்னுடைய சிறுவயதில் தன்னுடைய புகைப்படம் தவறான முறையில் சித்தரிக்கப்பட்டு, அது இணையதளத்தில் வைரலாக பரப்பப்பட்டதை கண்டு, மன வேதனை அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார் ஜான்வி கபூர். அவர் வேதனையாக இந்த நிகழ்வை பகிர்ந்து இருந்தாலும், சினிமா உலகத்தை பொறுத்தவரையில், இது போன்ற சம்பவங்கள் நடப்பது இயல்பான ஒன்றாகிவிட்டது என்பது தான் கசப்பான உண்மை.

ஜான்வி கபூர் சமீபத்தில் ஒரு பிரபலத்தின் வீட்டில் வளரும் குழந்தையாக இருப்பது மிகவும் கடினமான ஒன்று என பிரபல செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியின் போது கருத்து தெரிவித்திருந்தார். அவர் அந்த கருத்து தெரிவித்ததோடு, அதற்கான காரணத்தையும் குறிப்பிட்டு இருந்தார். இந்த காரணம் தான் தற்போது சினிமா உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது, ஜான்வி கபூர் தனக்கு நான்கு வயதாக இருந்தபோது நடைபெற்ற ஒரு கசப்பான சம்பவத்தை பற்றி அந்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

அதாவது தனக்கு நான்கு வயது இருந்த போது இணையதளத்தில் மார்பிங் செய்யப்பட்ட தன்னுடைய புகைப்படத்தை பார்த்து, அதிர்ச்சியில் உறைந்ததாக அவர் வேதனையோடு கூறியிருந்தார். அப்படி ஒரு இழிவான செயலை யார் செய்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அவர்களின் இந்த செயலால், நான் பல்வேறு சங்கடங்களை சந்தித்துள்ளேன் என்று அவர் கூறியுள்ளார். இதன் காரணமாக, பள்ளி உட்பட எல்லா இடங்களிலும் பல்வேறு சங்கடங்களை தான் சந்திக்க நேர்ந்ததாக வேதனையோடு தெரிவித்துள்ளார் ஜான்வி கபூர்.

மேலும் யாரோ ஒரு முகம் தெரியாதவர் செய்த தவறை, தன்னுடைய நண்பர்களும், பள்ளியில் இருந்தவர்களும் புரிந்து கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ள அவர், அனைவரும் தன்னை ஒரு வித்தியாசமாகவே பார்த்து வந்தனர் என்றும் கூறியிருக்கிறார். தற்போது அவருடைய இந்த பேட்டி இணையத்தில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. அதோடு அவருடைய பேட்டி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

.

Next Post

இனி அனைத்திற்கும் பிறப்பு சான்றிதழ்..!! நாளை முதல் அமல்..!! மத்திய அரசு அறிவிப்பு..!!

Sat Sep 30 , 2023
இந்தியக் குடிமகன் அடையாளச்சான்றாக ஆதார் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது தவிர வாக்காளர் அடையாள அட்டை, பான்கார்டு, லைசன்ஸ் என பல சான்றிதழ்கள் உள்ளன. அந்த வரிசையில், இனி பிறப்பு சான்றிதழையும் அடையாளச் சான்றாக பயன்படுத்தலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது. நாளை அக்டோபர் 1ஆம் தேதி முதல் பிறப்புச் சான்றிதழை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. வாக்காளர் […]

You May Like