fbpx

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால்தான் கோவிலுக்குள் ஸ்ரீராமர் வருவார்.! மந்திரியின் கருத்தால் புதிய சர்ச்சை.!

உத்திரபிரதேசம் மாநிலத்தின் புனித தலங்களில் ஒன்றான அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இது தொடர்பாக பேசியிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறும் தினத்தில் அனைத்து பக்தர்களும் ராம தீபத்தை ஏற்றி தீபாவளி போல வழிபட வேண்டும் என தெரிவித்திருந்தார். இது தொடர்பாக பீகார் மாநில அமைச்சர் கூறியிருக்கும் கருத்து சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

பீகார் மாநிலத்தில் அமைச்சராக இருப்பவர் தேஜ் பிரதாப் யாதவ். இவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் ராமர் கோவில் கொண்டாட்டங்கள் பற்றிய கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து பேசிய தேஜ் பிரதாப் யாதவ்” இந்தியக் கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தால்தான் ஸ்ரீராமர் தனக்காக கட்டப்பட்டிருக்கும் கோவிலுக்கு வருவார்” என தெரிவித்திருக்கிறார் இவரது இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கு முன்பு பாரத பிரதமர் மோடி பிரதான பக்தி நகரமான அயோத்தியை பல்வேறு வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் சிட்டியாக உருவாக்குவது தனது வாக்குறுதி என தெரிவித்திருந்தார். மேலும் பக்தர்கள் அனைவரும் ராமர் கோவில் திறப்பு விழா அன்று அயோத்திக்கு வருகை புரிந்து நெருக்கடியை ஏற்படுத்த வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசும் அவர்களுக்கு எதிரான இந்தியா கூட்டணியும் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் ராமர் கோவில் விவகாரத்தை கையில் எடுத்திருப்பது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது .

Next Post

மீண்டும் மீண்டுமா.? சென்னைக்கு மீண்டும் எச்சரிக்கையா.? கலக்கத்தில் பொதுமக்கள்.!

Thu Jan 4 , 2024
கடந்த டிசம்பர் மாதம் கன மழை மற்றும் புயலால் தமிழகம் மிக மோசமான பாதிப்புகளை சந்தித்தது. டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் கடும் மழை பாதிப்பிற்குள்ளானது. வரலாறு காணாத கனமழை பொழிவால் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததோடு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு மற்றும் தன்னார்வலர்கள் நிதி உதவிகள் மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். சென்னையைத் […]

You May Like