fbpx

விவசாயிகளுக்கு ரூ.2000 பணம் எப்போது கிடைக்கும்..? மத்திய அரசு வெளியிட்ட குட்நியூஸ்…

பிரதமர் கிசான் சம்மான் என்பது விவசாயிகளுக்காக மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு திட்டமாகும். கடந்த 2018-ம் ஆண்டு, டிசம்பர் 1 முதல் இந்த திட்டம் அமலுக்கு வந்தது. இதன் கீழ், விவசாயிகளுக்கு தலா ரு.2,000 என மூன்று தவணைகளில் ஆண்டுக்கு ரூ 6,000 வழங்கப்படுகிறது.. இந்த திட்டத்தில் விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, அவர்களின் வங்கிக் கணக்கில் ரூ. 2000 செலுத்தப்படும்.

ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும், அதாவது ஏப்ரல்-ஜூலை, ஆகஸ்ட்-நவம்பர் மற்றும் டிசம்பர்-மார்ச் என மூன்று தவணைகளில் தலா ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு ரூ.6,000 நிதிப் பலன் தகுதியான விவசாயிகளுக்கு வழங்கப்படும். இந்த திட்டத்தின் 11-வது தவணை கடந்த மே மாதம் 31-ம் தேதி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது..

இந்நிலையில் 12-வது தவணையை மத்திய அரசு இன்று விடுவிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. அதன்படி இத்திட்டத்தில் பயன்பெற தகுதியான அனைத்து விவசாயிகளுக்கு 12-வது தவணையாக ரூ.2000 வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று கூறப்படுகிறது.. டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியுடன் இணைந்து, அரசாங்கம் தகுதியுள்ள விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ரூ.2 000 தவணை செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் விவசாயிகளின் ஆதார் விவரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. தரவுத்தளத்தில் விவசாயிகள் மற்றும் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் உள்ளன. அவர்களின் பெயர்கள் நிலப் பதிவேடுகளில் உள்ளன..

உங்கள் PM-KSNY தவணையை எப்படி சரிபார்ப்பது..?

  • படி 1 – அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும் – https://pmkisan.gov.in/.
  • படி 2 – இப்போது முகப்புப்பக்கத்தில் ‘Farmer’s Corner Section’ பார்க்கவும்.
  • படி 3 – ‘Beneficiary Status’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். இங்கே, பயனாளி தனது விண்ணப்ப நிலையை சரிபார்க்கலாம். பட்டியலில் விவசாயியின் பெயர் மற்றும் அவரது வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்ட தொகை இருக்கும்.
  • படி 4 – உங்கள் ஆதார் எண் அல்லது கணக்கு எண் அல்லது மொபைல் எண்ணை உள்ளிடவும்.
  • படி 5 – பின்னர் ‘Get data’’ என்பதைக் கிளிக் செய்யவும்.. உங்களுக்கு தேவையான விவரங்கள் கிடைக்கும்.

PM-KSNY : நிலையை எப்படி சரிபார்க்க வேண்டும்..?

  • படி 1: PM கிசான் அதிகாரப்பூர்வ இணையதளம்: pmkisan.gov.in-க்கு செல்லவும்
  • படி 2: இணையதளத்தின் மேல் வலதுபுறத்தில் உள்ள ‘Farmer’s Corner Section-ல் உள்ள ‘Beneficiary Status’ விருப்பத்தை கிளிக் செய்யவும்.
  • படி 3: பின்னர் புதிய பக்கம் உருவாகும்.. ஆதார் எண், வங்கி கணக்கு எண் அல்லது மொபைல் எண் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு எண்ணை தேர்ந்தெடுக்கவும். இந்த எண்களின் உதவியுடன், நீங்கள் PM கிசான் தொகையைப் பெற்றுள்ளீர்களா இல்லையா என்பதையும் சரிபார்க்கலாம்.
  • படி 4: நீங்கள் தேர்ந்தெடுத்த விருப்பத்தின் விவரங்களை நிரப்பவும்.
  • படி 5: PM கிசான் 8 வது தவணை தொடர்பான தகவல்களையும் பெறுவீர்கள்.

Maha

Next Post

ஆதார் கார்டு மூலம் உங்கள் பேங்க் பேலன்ஸை எப்படி சரிபார்ப்பது..? எளிய வழிமுறை இதோ..

Mon Sep 5 , 2022
இந்திய குடிமக்கள் இப்போது தங்கள் வங்கி இருப்பை (Bank Balance) சரிபார்க்க ஆதார் அட்டையைப் பயன்படுத்தலாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வழங்கிய 12 இலக்க எண் தான் ஆதார் எண் ஆகும், மேலும் இது கைரேகை மற்றும் கருவிழி ஸ்கேன் படங்கள் போன்ற உங்கள் பயோமெட்ரிக் தரவுகளுடன் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. எனவே இந்திய குடிமக்கள் தங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள தங்கள் வங்கிக் கணக்குகளின் இருப்பை, கிளைக்குச் […]

You May Like