fbpx

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை எப்போது தொடங்கப்படும்..? மத்திய அமைச்சர் சொன்ன தகவல்…

‘புல்லட் ரயில்’ திட்டத்தின் வேகமாக நடைபெற்று வருவதாக என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.

நாட்டின் முதல் புல்லட் ரயில் 2026 ஆம் ஆண்டுக்குள் இயக்கப்படும் என்று வைஷ்ணவ் அறிவித்தார். இந்த புல்லட் ரயில் திட்டத்தின் பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், இத்திட்டத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.. மேலும் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் விளைவாக நாட்டின் முதல் “அதிவேக ரெயிலின்” எதிர்பார்க்கப்படும் செலவு ரூ.1.6 லட்சம் கோடியை தாண்டும் என்றும் குறிப்பிட்டார். 2015-க் நடத்தப்பட்ட முதல்கட்ட ஆய்வில் இத்திட்டத்தின் செலவு ரூ.1.08 லட்சம் கோடியாக இருந்த நிலையில் தற்பொது இந்த செலவு ரூ.3 லட்சம் கோடியை தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது..

இதனிடையே கொரோனா பெருந்தொற்று மற்றும் நிலம் கையகப்படுத்தல் சிக்கல்களால் இந்த புல்லட் ரயில் திட்டத்தில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நிலம் கையகப்படுத்துதலுக்கான செலவு அதிகரிப்பு, சிமென்ட், எஃகு மற்றும் இதர மூலப்பொருட்களின் விலை உயர்வு போன்ற காரணங்களால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.. தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியில் மட்டுமே இதுவரை 100% நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

குஜராத்தில் நிலம் கையகப்படுத்துதல் பணி 98.9 சதவீதமும், மகாராஷ்டிராவில் 73% ஆகவும் உள்ளது. மகாராஷ்டிராவில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம்தான் இந்தத் திட்டத்தில் தாமதம் ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் என்று மத்திய அரசு கூறி வருகிறது..

508 கிமீ நீளமுள்ள அகமதாபாத்-மும்பை அதிவேக ரயில் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர்-ம் தேதி தொடங்கி வைத்தனர்.. 2022-ம் ஆண்டு இந்த திட்டம் முடிவடையும் என்று கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

தொடர் கனமழையால் வைகை அணை நிரம்பியது..! 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

Wed Aug 3 , 2022
வைகை அணை நிரம்பியதை அடுத்து 5 மாவட்ட மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணையின் முழு கொள்ளளவு 71 அடியாக உள்ளது. முல்லைப் பெரியாறு அணை மற்றும் வைகையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேகமலை வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. நேற்று காலை வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால், […]
"இந்த 5 மாவட்ட மக்களும் எச்சரிக்கையா இருங்க”..! வெள்ள அபாய எச்சரிக்கை..!

You May Like