fbpx

தமிழ்நாட்டில் மீண்டும் எப்போது மழை பெய்யும்..? வானிலை மையம் சொன்ன குட் நியூஸ்..!!

தமிழ்நாட்டில் வரும் 20ஆம் தேதி முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று மற்றும் நாளை தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதாகவும் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, வரும் 20ஆம் தேதி தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 21, 22ஆம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, இன்று மற்றும் நாளை தமிழகத்தின் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பில் இருந்து இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

கொளுத்தும் வெயில்..!! பணி நேரத்தை மாற்றியமைக்க உத்தரவு..!! மத்திய அரசு பரபரப்பு கடிதம்..!!

Tue Apr 18 , 2023
கடும் வெயில் காரணமாக தொழிலாளர்களின் பணி நேரத்தை மாற்றியமைக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. ஏப்ரல் மாதத்தில் நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்தும் என்பதும், பல நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் இருக்கும் என்பது வழக்கம். அந்தவகையில், பஞ்சாப், ஹரியானா மற்றும் வடமேற்கு மாநிலங்களில் வரும் நாட்களில் வெப்பம் மிக அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

You May Like