கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 3-ம் தேதி வகுப்புகள் துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்கள் உள்ளது. இதற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 75, 811 மாணவர்கள் முதலாம் ஆண்டில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து மீதமுள்ள இடங்களுக்கு இனசுழற்சி முறையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில் ஜூன் 30 ஆம் தேதி வரையில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும். அதனைத் தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 3-ம் தேதி வகுப்புகள் துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.