இந்தியாவில் அடுத்த சில நாட்களுக்கு தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயரும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்..
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000, 2000 என உயர்ந்து வந்த நிலையில் நேற்று 7,000-ஐ கடந்தது. ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.. இதை தொடர்ந்து கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும், கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு மாநிலங்களை வலியுறுத்தி வருகிறது… மேலும் மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்ஸிஜன் வசதி மற்றும் தேவையான மருந்துகள் தயார் நிலையில் உள்ளதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது…
இந்நிலையில் இந்தியாவில் வரும் நாட்களில் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்றும், நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.. அதாவது அடுத்த சில நாட்களுக்கு தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயரும் என்றும், ஆனால் 10 நாட்களுக்கு பிறகு குறையத் தொடங்கும் கூறியுள்ளனர்.. கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும், மருத்துவமனையில் சேர்க்கப்படுவது குறைவாக உள்ளது என்றும் மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
ஒமிக்ரான் மற்றும் அதன் துணைப் பரம்பரைகள் ஆதிக்கம் செலுத்தும் மாறுபாடாக தொடரும் அதே வேளையில், தொற்று தீவிரமாக பரவில்லை.. XBB.1.16 மாறுபாட்டின் பரவலானது இந்த ஆண்டு பிப்ரவரியில் 21.6% ஆக இருந்து மார்ச் மாதத்தில் 35.8% ஆக அதிகரித்துள்ளது. எவ்வாறாயினும், இந்த மாறுபாடு காரணமாக அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவோ அல்லது இறப்பு அதிகரிப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை..
மறுபுறம், இந்தியாவில் நேற்றைய ஒரு நாள் பாதிப்பு 7000-ஐ கடந்தது.. ஒரே நாளில், புதிதாக 7,830 பேருக்கு தொற்று உறுதியானது.. இது 7 மாதங்களில் அதிகபட்ச ஒருநாள் பாதிப்பு ஆகும். கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 40,215 ஆக அதிகரித்துள்ளன. நேற்று ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்ததால் கொரோனா எண்ணிக்கை 5,31,016 ஆக அதிகரித்துள்ளது.. கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,42,04,771 ஆக உயர்ந்துள்ளது மற்றும் இறப்பு விகிதம் 1.19 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.