fbpx

”எங்க வந்து யார்கிட்ட சீன் போடுற”..!! கள்ளக்காதலிக்காக காவல்நிலையத்தில் அட்ராசிட்டி செய்த காவலர்..!! தட்டித் தூக்கிய போலீஸ்..!!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சவுண்டப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (38). இவர், ஈரோடு மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரிந்த போது ஏற்கனவே 2 முறை தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு டிஜிபியின் கருணையின் பேரில் மீண்டும் காவலர் பதவி கிடைத்தது. தற்போது பவானிசாகர் காவல் நிலையத்தில் 2ஆம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார்.

இவர், அந்தியூர் அருகே உள்ள மைக்கேல் பாளையம் பகுதியில் உள்ள திருமணமான பெண் ராணி (27) என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. கடந்த 6 மாதமாக இருவருக்குள்ளும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 6ஆம் தேதி காலை 8 மணி அளவில் ராணி வீட்டிற்கு சென்று குடிபோதையில் வாய் தகராறு செய்துள்ளார் காவலர் கார்த்திக். இதையடுத்து, ராணி அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் செய்ய சென்றிருந்த போது, கார்த்திக் அந்தியூர் காவல் நிலையத்திற்கே சென்று காவலர்களிடம் தகராறு செய்துள்ளார்.

இது தவிர, உதவி ஆய்வாளர் சந்திரன் மற்றும் தலைமை காவலர் ராமச்சந்திரன் என்பவரிடம் தகராறு செய்து தகாத வார்த்தைகள் பேசி திட்டியுள்ளார். தலைமை காவலர் ராமச்சந்திரனின் சட்டையை பிடித்து இழுத்து அநாகரிமாக நடந்து கொண்டுள்ளார். இது சம்பந்தமாக காவலர் கார்த்தி மீது, பொது இடத்தில் பொதுமக்கள் பார்வை படும்படி கள்ளக்காதலியை மானபங்கம் செய்தல், ஆபாசமாக பேசுதல், தலைமைக் காவலரின் சட்டையைப் பிடித்து இழுத்து கிழித்தல், பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது கார்த்திக்கை செய்துள்ளனர்.

Read More : ஆசை காட்டினால் கூட்டணியில் இருந்து வெளியேறி தவெகவில் இணைந்து விடுவோமா..? விஜய்க்கு பதிலடி கொடுத்த திருமா..!!

English Summary

He quarreled with Assistant Inspector Chandran and Head Constable Ramachandran and used inappropriate words.

Chella

Next Post

வாகன ஓட்டிகளே..!! டிரைவிங் லைசென்ஸை இனி இவ்வளவு ஈசியா வாங்கலாமா..? ஆன்லைனில் உடனே அப்ளை பண்ணுங்க..!!

Sat Nov 9 , 2024
In order to provide services to the public through online, the Tamil Nadu government had issued a notification regarding the purchase of driving license using Aadhaar card.

You May Like