fbpx

”எங்க வந்து என்ன தொழில் பண்ணிட்டு இருக்கீங்க”..!! திடீரென நுழைந்த போலீஸ்..!! அரண்டுபோன கும்பல்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் விஐபிக்கள் வசிக்கும் சுஷாந்த் கோல்ஃப் சிட்டியில் அலக்நந்தா என்கிளேவ் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் உள்ளது. இங்கு வெளிநாட்டு பெண்கள் அடிக்கடி வந்து போவதால், அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து அந்த பிளாட்டில் உள்ளவர்களிடம் விசாரித்த போது, அவர்களுக்கும் குடியிருப்புவாசிகளுக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சுஷாந்த் கோல்ஃப் சிட்டி காவல் நிலையத்தில் குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, அங்கு விரைந்த போலீஸார், டி2-104- பிளாட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு வெளிநாட்டுப் பெண்களை நீண்ட காலமாக வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. அந்த குடியிருப்பில் போலீசார் தீவிர சோதனையிட்டனர். அப்போது தாய்லாந்தை சேர்ந்த 3 பெண்கள் பிடிபட்டனர்.

அவர்களை வைத்து பாலியல் தொழில் செய்தவர்கள் என மொத்தம் 10 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். விஐபிக்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாட்டுப் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தப்பட்ட விவகாரம் லக்னோவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

போலீஸ் என்கவுண்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை..!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

Tue Sep 19 , 2023
கூடுவாஞ்சேரியில் போலீஸ் என்கவுண்டரில் இருவர் கொல்லப்பட்டது குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அடுத்த கூடுவாஞ்சேரி காரணை புதுச்சேரி பகுதியில் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸாரை தாக்கிவிட்டு தப்பியோடிய வினோத் என்ற சோட்டா வினோத் மற்றும் ரமேஷ் ஆகிய 2 ரவுடிகள் காவல்துறையினரால் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர். இதுகுறித்து சிபிசிஐடி விசாரிக்க கோரி சோட்டா வினோத்தின் தாயார் ராணி சென்னை உயர்நீதிமன்றத்தில் […]

You May Like