fbpx

Rain: இன்று எந்தெந்த மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது…? வானிலை மையம் சொல்லிய தகவல்…!

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். சூறாவளி காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

Vignesh

Next Post

பிணத்தை கழுவிய நீரில் சமைக்கும் பழங்குடியினர்!… பெண்களை சாட்டையால் அடித்து திருமணம் செய்யும் ஆண்கள்!

Sat Oct 28 , 2023
உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மாதிரியான மரபுகள் மற்றும் பழக்க வழக்கங்கள் இருக்கும் இருந்திருக்கும் இதை யாராலும் மறுக்க முடியாது. இதில் ஆப்பிரிக்காவில் இன்றும் வாழ்ந்து வரும் சில பழங்குடியினரின் பாரம்பரிய பழக்க வழக்கங்களைக் கண்டால், நமக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை தரும்.அதிலும் இன்னும் திரைபடங்களில் வரக்கூடியமிகவும் வித்தியாசமான பழக்க வழக்கங்களை ஆப்பிரிக்காவில் உள்ள சில பழங்குடியின மக்கள் பின்பற்றி தான் வருகின்றனர். ஆப்பிரிக்காவில் உள்ள பழங்குடியினர் பின்பற்றும் விசித்திரமான […]

You May Like