fbpx

பொங்கல் திருநாளன்று எந்த கோயில்களுக்கு சென்று தரிசித்தால் நல்லது..? கண்டிப்பா போங்க..!!

தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தின் அடையாளமாகத் திகழும் பொங்கல் திருநாளன்று தமிழ்நாட்டில் செல்லக்கூடிய கோயில்களின் விவரங்களை தற்போது பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் சாதி, மதம், பேதம் இன்றி அனைவராலும் கொண்டப்படும் திருநாள் தான் பொங்கல் பண்டிகை. இந்த திருநாளில் உறவினர்களுடன் ஒன்று கூடி கொண்டாடி மகிழ்வர். காணும் பொங்கல் நாளில் கிராமங்களில் மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு, போன்று பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் களைகட்டும். ஜல்லிக்கட்டு விளையாட்டு உலகம் முழுவதும் புகழ் வாய்ந்த ஒன்றாகும். அதேபோல் சிலர் கோயிலுக்கு செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

காணும் பொங்கலில் சுசீந்தரம் தானுமலையான் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்யலாம். இது நாகர்கோவிலில் இருந்து குமரி செல்லும் வழியில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சிவன், விஷ்ணு, பிரம்மன் ஆகிய 3 தெய்வங்களும் அருள்பாலிக்கிறார்கள். மூவருக்கும் தனித்தனி சந்நதிகள் அமைந்துள்ளன. அதேபோல், காஞ்சியில் உள்ள ஸ்ரீ ஆதிசங்கரர் பகவத் பாதான் ஆலயத்தை காணும் பொங்கலில் சென்று தரிசனம் செய்யலாம்.

அதேபோல், மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், கூடல் அழகர் கோவில் என பாரம்பரியமான பல கோயில்கள் உள்ளன. கோவையில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலை, மருதமலை உள்ளிட்ட கோவில்கள் உள்ளன. தஞ்சையில் கங்கைகொண்ட சோழபுரம் கோயில் மற்றும் ஐராவதேஸ்வரர் கோயில்களும் உள்ளன. மேலும், பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். இக்கோவிலில் பொங்கல் தினத்தன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

Chella

Next Post

#Breaking News: கனமழைக்கு பலியான 12ஆம் வகுப்பு மாணவன்.! நாகை அருகே சோகம்.!

Mon Jan 8 , 2024
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆங்காங்கே அசம்பாவித சம்பவங்களும் ஏற்பட்டு வருகின்றன இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கனமழைக்கு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. நாகப்பட்டினத்தில் 12-ஆம் வகுப்பு படித்து வரும் அஜீஸ் என்ற மாணவன் பள்ளி விடுமுறை என்பதால் […]

You May Like