fbpx

சித்தர் சொன்னதை தான் நான் பேசினேன்.. தப்பா எதுவும் பேசல..!! – தவறை ஒப்புக்கொள்ளாத மகாவிஷ்ணு.. என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மகாவிஷ்ணு என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தனது வாக்குமூலத்தில் சித்தர் என்ன சொன்னாரோ, அதை தான் நான் பேசினேன் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் மோட்டிவேஷன் ஸ்பீச் பேசிய நிலையில் அவரது கருத்து சர்ச்சையாக மாறியது. குறிப்பாக அவர் மறு ஜென்மம் குறித்து பேசியதும் மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசியதும் சர்ச்சைக்குரியதாக மாறி உள்ள நிலையில் நேற்று அவர் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள நிலையில், தான் சித்தர்கள் ஆசீர்வாதத்தால் சொற்பொழிவுகள் நடத்தி வருவதாகவும், தனது யூ-டியூப் சேனலை 5 லட்சம் பேர் பின் தொடர்வதாகவும், பரம்பொருள் பவுண்டேஷன் மூலமாக பல்வேறு உதவிகளை வழங்கி வருவதாகவும், 5 நாடுகளில் இது போன்ற சொற்பொழிவுகளை ஆற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார். தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், மாணவ மாணவிகளை நல்வழிப்படுத்தும் நோக்கில் பேசியதாகவும், இது போன்று பல இடங்களில் தான் பேசி இருப்பதாகவும் மகா விஷ்ணு போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும், சித்தர்கள் தன்னிடம் பேசுவார்கள், சித்தர் சொன்னதை தான், பேசினேன். தன்னை சித்தர்கள் தான் வழி நடத்துகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார். பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் பற்றி தான் பேசியதாகவும், தவறாக ஏதும் பேசவில்லை எனவும், தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக நீதிபதியிடமும் மகா விஷ்ணு வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், மகா விஷ்ணுவை விமான நிலையத்தில் இருந்து போலீசார் அழைத்து சென்ற பின், போலீஸ் வாகனத்தில் வைத்தே அவரை பல்வேறு இடங்களில் சுற்றி வாக்குமூலம் பெற்றுள்ளனர். மாற்றுத் திறனாளிகள் குறித்த பேச்சுக்கு அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Read more ; Moeen Ali | சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு அறிவித்தார் மொயின் அலி..!! ரசிகர்கள் ஷாக்..

English Summary

While Mahavishnu has been arrested for speaking in a controversial manner in a Chennai government school, he has said in his statement that what Siddhar said, that is what I said, has created a stir.

Next Post

பெரும் சோகம்...! உ.பி-யில் மூன்று மாடிக் கட்டிடம் சரிந்து விபத்து...! 8 பேர் சம்பவ இடத்திலேயே மரணம்...!

Sun Sep 8 , 2024
Lucknow building collapse: 3 more bodies recovered, toll rises to 8

You May Like