பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்ட நிலையில், நேற்று முதல் மீண்டும் தொடங்கியது.
தமிழகத்தில் ஆகஸ்ட் 25-ம் தேதி தொடங்க இருந்த பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு, நீட் தேர்வினால் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு மீண்டும் தொடங்கியுள்ளது. நவம்பர் 13ஆம் தேதி வரை நான்கு கட்டங்களாக நடைபெறும் என்று கூறப்படுகிறது. கட் – ஆப் 184 முதல் 200 வரை உள்ள 14,524 பேர் முதல் சுற்று கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர். அதோடு 332 அரசுப்பள்ளி மாணவர்கள் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் முதல் சுற்று கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர்.
கலந்தாய்வில் இடங்கள் ஒதுக்கப்பட்ட பின், வரும் 22ஆம் தேதிக்குள் மாணவர்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் சேர வேண்டும். 22-ம் தேதிக்குள் கல்லூரிகளில் சேராவிட்டால் அந்த இடங்கள் காலியாக அறிவிக்கப்பட்டு, மீண்டும் கலந்தாய்வு நடத்தப்படும். மேலும் இது குறித்து http://www.tneaonline.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.