fbpx

நடிகை ரம்யா கிருஷ்ணன் உடன் விவாகரத்தா? கணவர் வம்சி பகிர்ந்த தகவல்.. ஷாக் ஆன ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவின் 80, 90 களில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். 1985ல் தனது 14 வயதில் நடிகையாக அறிமுகம் ஆன ரம்யா கிருஷ்ணனுக்கு ‘முதல் வசந்தம்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதன் பின் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வர, கதாநாயகியாக கலக்க தொடங்கினார். ரம்யா கிருஷ்ணன் ‘படையப்பா’ படத்தில் ஏற்று நடித்த நீலாம்பரி கதாபாத்திரம் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் உச்சகட்ட வரவேற்பை கொடுத்தது.

இன்றும் நீலாம்பரி கதாபாத்திரத்தை 90ஸ் கிட்ஸ் கொண்டாடி வருகின்றனர். அந்த அளவுக்கு அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருப்பார் நடிகை ரம்யா கிருஷ்ணன். அதே போல், ‘பஞ்சதந்திரம்’ படத்தில் மேகி கதாபாத்திரம் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தார் ரம்யா கிருஷ்ணன். அதன் பின் மீண்டும் ‘பாகுபலி’ படத்தில் ராஜமாதாவாக தனது நடிப்பில் அசத்தியிருப்பார் ரம்யா கிருஷ்ணன். சினிமா மட்டுமின்றி சின்னத்திரையிலும் கலக்கியவர் ரம்யா கிருஷ்ணன். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

தனது அசத்தலான நடிப்பால் தமிழ் மட்டுமின்றி பிற மொழியிலும் பிரபல அண்டிகையாக வளம் வந்து 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள  ரம்யா கிருஷ்ணனும் அவரது கணவர் கிருஷ்ண வம்சியும் பல நாட்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர், அவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய உள்ளனர் என தொடர்ந்து வதந்திகள் பரவி வந்தது. இதையடுத்து, ரம்யா கிருஷ்ணனின் கணவர் இதுகுறித்து விளக்கமும் அளித்துள்ளார். 

அவர் கூறுகையில், அதில் படங்களின் கமிட்மெண்ட் காரணமாகவே தான் ஹைதராபாத்திலும் ரம்யா கிருஷ்ணன் சென்னையில் வசித்து வருவதாக அவர் கூறியுள்ளார். ஆனால் தாங்கள் பிரிந்துள்ளதாகவும் விவாகரத்து செய்துள்ளதாகவும் தகவல்கள் பரப்புவது வதந்தி என்றும் அவர் தன்னுடைய பேட்டியில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், இருவரும் சமீபத்தில் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாததால், இந்த வதந்திகள் பிறந்திருக்கலாம், தங்களின் தனிப்பட்ட நிகழ்ச்சிகள், குடும்ப நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாகவே சென்று வருகிறோம். ஆனால் அந்தப் புகைப்படங்களை பொதுவெளியில் வெளியிட விருப்பமில்லை எனக் கூறி வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார் வம்சி.

Read more ; நெருங்கும் பண்டிகை.. டாஸ்மாக் கடைகளில் வருகிறது புதிய வசதி!! மது பிரியர்கள் ஹேப்பி..

English Summary

Director Vamsi has put an end to rumors that Ramya Krishnan is divorcing her husband Vamsi for the past few months.

Next Post

தமிழக அரசு அறிவித்துள்ள 3 சதவீத அகவிலைப்படி உயர்வு யார் யாருக்கு பொருந்தும்?

Sun Oct 20 , 2024
According to the 3 percent discount announced by the Tamil Nadu government, we can see in this post who is eligible for the increase

You May Like