காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17ம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனுத்தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் . இதுவரை திக் விஜஸ் சிங், சசிதரூர் , மல்லிகார்ஜுன கார்கே, கெல்லட் ஆகியோர் தலைவராக மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெல்லட் தேர்தல் போட்டியில் இருந்து விலகிய நிலையில் திக் விஜஸ் சிங்கும் வாபஸ் பெற்றார். இந்நிலையில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறும். வேட்பாளர்கள் யார் யார் என்பது குறித்த தகவல் நாளை தெரிந்துவிடும்.

இந்நிலையில் மல்லிகார்ஜுன கார்கே தலைவராவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதால் அவரே தலைவராவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. நேரு குடும்பத்தின் ஆதரவு அவருக்கு இருப்பதால் எதிர்பார்ப்பு வலுப்பெற்றுள்ளது. 25 ஆண்டுகளாக நேரு குடும்ப வாரிசுகள் , குடும்பத்தினர் போட்டியிட்டு தலைவராக பதவியில் நீடித்து வந்தனர். இந்நிலையில் அடுத்தடுத்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக ராகுல்காந்தி தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.

இதையடுத்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் கேட்டுக்கொண்டனர். அக்டோபர் 17ம் தேதி நடைபெற உள்ள தேர்தலின் மூலம் நேரு குடும்பத்தில் அல்லாத ஒரு நபர் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
இவர் கர்நாடக மாநிலத்தில் இருந்து தேசியத் தலைவராகும் 2-வது நபராக இருப்பார். மேலும், ஜகஜீவன் ராம் , சீதாராம் கேசரி வரிசையில் பட்டியல் பிரிவைச் சேர்ந்த 3வது தலைவராவார்.
கார்கே பற்றி குறிப்புகள் : மல்லிகார்ஜுன கார்கே கர்நாடக மாநிலம் பீதரில் 1942ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி பிறந்தவர். 80 வயதாகும் இவர் 1972ம் ஆண்டு முதல் 2008 வரை கர்நாகடத்தில் 9 பேரவைத் தேர்தல்களில் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். 20090ம் ஆண்டில் எம்.பி. தேர்தலில் போட்டியிட்டு தொடர்ந்து வெற்றிபெற்றுள்ளார். மன்மோகன் சிங் அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை மற்றும் ரயில்வே துறை அமைச்சராக செயல்பட்டார். 2019ல் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றாலும் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார். குலாம்நபி ஆசாத் விலகியதால் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் பதிவியில் வெற்றி வாய்ப்புகள் இவருக்கு சாதகமாக இருப்பதால் இன்று காலை தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஒருவருக்கு ஒரு பதவி என்ற விதி கட்சியில் உள்ளது .இதனால் இவர் எதிர்க்கட்சி பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.