fbpx

யாரெல்லாம் மைதா சாப்பிடவே கூடாது தெரியுமா..? பரோட்டா சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சனைகள் வருமா..?

மைதா உணவுகளை ஆசையாக சாப்பிடுகிறீர்களா? இரவில் பரோட்டா சாப்பிடுகிறீர்களா? அப்படியென்றால், உடல்நலனில் மிகுந்த அக்கறை காட்ட வேண்டியிருக்கிறது.

கோதுமை மாவை பதப்படுத்தி, அதில் இருந்து தவிடு, என்டோஸ்பெர்ம் போன்றவற்றை நீக்கிவிடுவார்கள். அதாவது, கோதுமை மாவிலிருக்கும் நார்ச்சத்துக்கள், ஊட்டச்சத்துக்கள் அனைத்தையும் நீக்கிவிட்டால், அதுதான் மைதா. இப்படி எந்தவிதமான சத்துக்களும் இல்லாத மைதாவை, நாம் சாப்பிட கூடாது என்கிறார்கள். இதில், கிளைசெமிக் குறியீடு நிறைந்திருக்கும் என்பதால், ரத்த சர்க்கரை அளவையும் உயரச்செய்துவிடும். இதனால், இன்சுலின் எதிர்ப்பையும் ஏற்படுத்திவிடும்.

அதாவது, மைதா சம்பந்தப்பட்ட உணவினை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு 90% சர்க்கரை நோய் வரவாய்ப்புள்ளதாக அமெரிக்க ஆய்வு ஒன்று கூறுகிறது. அதாவது, 100 கிராம் மைதாவில் 351 கலோரிகள் உள்ளது. மேலும் 10.3 கிராம் புரதம், 0.7 கிராம் கொழுப்பு, 2.76 கிராம் நார்ச்சத்து, 74.27 மாவுச்சத்து இருக்கிறதாம். இப்படி எந்த நார்ச்சத்தும் இல்லாத மைதாவில் செய்த உணவை, மிக குறைவாக சாப்பிட்டாலும்கூட, ரத்த சர்க்கரை அளவு உடனே கூடிவிடுமாம். அதுமட்டுமல்ல, மைதாவில் எந்த உணவு செய்தாலும் அதிகமான எண்ணெய் பயன்படுத்தியே செய்யப்படுகிறது. இதனால், மைதாவுடன் சேர்த்து எண்ணெய்யும் நமக்கு கெடுதலை தருகிறது.

கொழுப்பு அதிகமாகி உடல் எடை கூடிவிடும். இது இதயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ரத்த அழுத்தத்தையும் அதிகப்படுத்தும். நார்ச்சத்து உட்பட எந்த சத்துமே இல்லாத இந்த மைதா உணவுகள் எளிதில் ஜீரணமாகாது. செரிமான கோளாறையும் உண்டாக்கிவிடும். மைதா உணவை சாப்பிடும்போது, குடல் பகுதியில் பசைபோல உருவாகி, செரிமானத்துக்கு தடங்கலை ஏற்படுத்துவதால், மைதாவை “Glue of the gut” என்று கிண்டலாக சொல்வார்கள். அதாவது, குடலின் இயக்கத்தை முற்றிலுமாக மந்தப்படுத்தி மலச்சிக்கலை மைதா உணவுகள் தந்துவிடும்.

அதுமட்டுமல்ல, இந்த கெமிக்கல்கள், உடலில் உள்ள எலும்புகளையும் பலவீனமடைய செய்கிறது. அதாவது, கால்சியம் சத்துக்களை அழித்துவிடுவதால், எலும்பின் அடர்த்தியும் குறைந்துவிடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். அதனால்தான், மைதாவில் செய்யும் பரோட்டாவை தவிர்க்க சொல்கின்றனர். அதுவும் இரவு நேரத்தில் எண்ணெய்யால் பிசைந்து தயாரிக்கப்பட்ட மைதாவை சாப்பிடும்போது, அது எளிதில் ஜீரணமாவதில்லை. உடலுழைப்பு இல்லாமல் அப்படியே சாப்பிட்டுவிட்டு தூங்கும்போது, கூடுதல் பாதிப்பை தந்துவிடுகிறது. பெரும்பாலானோர் இரவில்தான் பரோட்டோவை சாப்பிடுவதால், அதனை தவிர்ப்பதே நல்லது என்கிறர்கள்.

cசர்க்கரை நோயாளிகள், கீல் வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இதய நோயாளிகள், உடல்பருமன் உள்ளவர்கள் மைதாவை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இதில், எடை அதிகமாக உள்ள பெண்களும் மைதா உணவுகளை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், எடை இன்னும் அதிகமாகிவிட்டால், மாதவிடாய் தள்ளிப்போவது முதல் ஏகப்பட்ட பிரச்சனைகள் வரலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதேசமயம், பரோட்டோ போன்ற உணவுகளை அளவுடனும், அதிக இடைவெளி விட்டும், சாப்பிடலாம் என்றும் இதுகுறித்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட நவீன ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஒருசாரார் வலியுறுத்த துவங்கி உள்ளனர்.

Read More : உங்கள் குழந்தைகளை செல்போன் பழக்கத்தில் இருந்து மீட்க சூப்பர் டிப்ஸ்..!! பெற்றோர்களே இதை டிரை பண்ணிப் பாருங்க..!!

English Summary

Craving maida dishes? Do you eat parotta at night? So, you have to take great care of your health.

Chella

Next Post

உங்கள் கிச்சன் சின்க்கில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறதா?? இதை மட்டும் செய்து பாருங்கள்..

Fri Nov 22 , 2024
do-this-to-remove-blocked-sink

You May Like