தமிழக அரசு வழங்குவதாக தெரிவித்துள்ள மகளிர் உரிமைத் தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பயன்பட ரேஷன் அட்டையில் எந்த விதமான மாற்றமும் செய்யப்பட தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.
தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டவுடன் அவர்களின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக பணம் செலுத்து அரசு சார்பாக முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. மகளிருக்கான 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கக்கூடிய திட்டம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு துரிதமாக மேற்கொண்டுள்ளது.
தகுதியான நபர்கள் தொடர்பான வரைமுறைகள் மிக விரைவில் வெளியிடப்பட உள்ளது ஆனாலும் ஒரு சில தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. குடும்பத்தைச் சார்ந்த பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை சென்றடைய வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியுடன் இருக்கிறது. ஒரு கோடி பெண்களுக்கு உரிமை தொகையில் வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான கணக்கெடுப்பு பணிகளும் தொடங்கி உள்ளது.