பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கமும் சேர்த்து வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.,1000 ரொக்கமாக தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. ஆனால், சமீபத்தில் வெளியான அறிவிப்பில், 2.19 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்றும், அதில் ஒரு கிலோ பச்சரிசி, ஒருகிலோ சர்க்கரை, முழு கரும்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையை ஒட்டி ரூ.1,000 பரிசுத்தொகை வழங்கப்படும் என முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.1,000 பரிசாக ரேஷன் கடைகளில் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த தொகை அனைவருக்கும் கிடைக்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பெற முடியும். மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் ஆகியோருக்கு பொங்கல் பரிசுத் தொகை ரூ.1000 வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.