fbpx

இந்து மதம் குறித்து இழிவாக பேசிய அமெரிக்க நபர்.. தரமான பதிலடி கொடுத்த விவேக் ராமசாமி..!! சர்ச்சையின் பின்னணி என்ன?

அமெரிக்க நபர் ஒருவர் இந்து மதம் குறித்து இழிவாக பேசிய நிலையில் அதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். அந்த நபரின் பேச்சுக்கு விவேக் ராமசாமி முறையான பதிலடியை கொடுத்து இருந்தார். இந்து மதத்தின் உள்ளார்ந்த சகிப்புத்தன்மைக்கு அவரின் பதில் சிறந்த எடுத்துக்காட்டு. அமெரிக்காவில் குடியரசுக் கட்சியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கும் அமெரிக்க குடிமகனுக்கும் இடையேயான உரையாடல் சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதுகுறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்..

இந்து மதத்தை இழிவு படுத்தும் சுவிசேஷக் குழுக்கள் : அமெரிக்காவில், சில சுவிசேஷ குழுக்கள் பொதுவாக பிற மதத்தினரை விமர்சிப்பது அதிகம். குறிப்பாக இந்து மதத்தை இழிவுபடுத்தும் விதமாக நீண்ட காலமாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்து மதம் மீது வெறுப்பை உமிழ்வது நீண்ட காலமாக அதிகரித்து வருகிறது.

தற்போது அமெரிக்க நபர் ஒருவர் நிகழ்ச்சி ஒன்றில் “இந்து மதம் ஒரு பொல்லாத மதம்.. அது வேற்று மதம்” என்று கூறியது பெரிய சர்ச்சையாகி உள்ளது. இதற்கு ராமசாமி மேடையிலேயே பதிலடி கொடுத்தார். இதே போன்ற விமர்சனங்கள்.. கருத்துக்கள் இந்தியாவில் கிறிஸ்துவ மதத்திற்கு எதிராக வைக்கப்பட்டு இருந்தால் பெரிய களேபரமே வெடித்து இருக்கும். ஆனால் விவேக் ராமசாமி சாந்தமாக பதிலடி கொடுத்து கவனம் ஈர்த்தார்.

பொதுவாக இந்து மதத்தில் சகிப்புத்தன்மை இல்லை, இந்துத்துவா சகிப்பற்ற தன்மையை பரப்புகிறது என்று ஒரு தவறான வாதம் வைக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக சகிப்பற்ற நாடாக மாறி வருவதாக கருத்துக்கள் வைக்கப்படுகின்றன. முக்கியமாக சர்வதேச சக்திகள் இந்தியா மீது கரை ஏற்படுத்தும் பணிகளை செய்து வருகின்றன. இது போன்ற கருத்துகளுக்குத்தான் ராமசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

பல்வேறு சமூகங்களில் நிலவும் மத வெறுப்பை எடுத்துக்காட்டும் விதமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது. முக்கியமாக அமைதியான மதமான இந்து மதம் மீது திணிக்கப்படும் அடிப்படையற்ற வெறுப்பிற்கு எடுத்துக்காட்டாக இந்த கருத்துக்கள் அமைந்துள்ளன. இந்து மதம் மீது தொடுக்கப்படும் அவதூறுகளை உலக நாடுகள் பெரிதாக கண்டுகொள்வதும் இல்லை.

முக்கியமாக கிறித்தவத்தின் மீதான விமர்சனங்கள் அல்லது கேலிகள் வைக்கப்படும் போது அது கடினமாக எதிர்கொள்ளப்படுகின்றன. கிறிஸ்தவ மதத்திற்கு ஆதரவாக பலர் களமிறங்குகிறார். இந்து மதத்திற்கு இதே நிலை ஏற்படும் போது.. அந்த குரல்கள் எழுப்பப்படுவது இல்லை. இன்றைய உலகில் உண்மையில் சகிப்புத்தன்மை உள்ளவர் யார்? என்ற கேள்வியை இந்த உரையாடல் ஏற்படுத்தி உள்ளது.

Read more ; கள்ளக்காதலனுடன் தனிமையில் உல்லாசம்.. வீட்டுக்குள் வைத்து பூட்டிய ஊர் மக்கள்..!! கடைசியில் நடந்த விபரீதம்..

English Summary

Why are Hindus easy targets? Ramaswami’s statement started a debate on faith and tolerance

Next Post

“அப்பா எனக்கு வலிக்குது, என்ன விடு” கதறி துடித்த 5 வயது மகள்; போதையில் தந்தை செய்த கொடூரம்…

Tue Nov 12 , 2024
man-raped-and-killed-his-own-daughter

You May Like