fbpx

தீபாவளி ஏன் 5 நாட்கள் கொண்டாடப்படுகிறது?. இதுதான் காரணம்!

Diwali: ஐந்து நாட்கள் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையில் ஒவ்வொரு நாளுக்கும் என்ன சிறப்பு உள்ளது? இந்த நாட்களில் என்ன செய்ய வேண்டும்? எப்படி வழிபட வேண்டும்? என்பது குறித்து பார்க்கலாம். ஐப்பசி மாதத்தின் 15வது நாளில், அமாவாசை அல்லது அதற்கு முந்தைய தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இந்தியாவின் தென் மாநிலங்களில் தீபாவளி பண்டிகை ஒரு நாள் விழாவாக கொண்டாடப்படும். அதே சமயம் வட மாநிலங்களில் மொத்தம் 5 நாட்கள் பண்டிகையாக இந்நாள் கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியின் முதல் நாள் என்பது அக்டோபர் 29ம் தேதி தந்தேராஸ் உடன் துவங்குகிறது. இரண்டாம் நாள் அக்டோபர் 30ம் தேதி சோட்டி தீபாவளி அல்லது நரக சதுர்த்தசி என்றும் கொண்டாடப்படுகிறது. 3ம் நாள் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி மற்றும் லட்சுமி பூஜையும், நவம்பர் 1 ம் தேதி அமாவாசை, நவம்பர் 02ம் தேதி கோவர்த்தன பூஜை, நவம்பர் 03ம் தேதி பாய் தோஜ் என பல்வேறு வழிபாடுகளுடன், கொண்டாட்டங்களும் நிறைந்ததாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தீபாவளியின் முதல் நாள் (அக்.29) தந்தேராஸ் உடன் துவங்குகிறது. இது மகாலட்சுமி மற்றும் குபேரரிடம் வீட்டின் செல்வ வளம் பெருகுவதற்கும், மகாலட்சுமியின் அருள் எப்போதும் நிறைவதற்கும் வழிபாடு செய்வதற்கான நாளாகும். இந்த நாளில் தங்கம், வெள்ளி காசுகள், தங்க நகைகள் வாங்குவது, தங்கம் போன்றவற்றில் முதலீடு செய்வது ஆகியவை பெருக்கத்தை கொடுக்கும் என நம்பப்படுகிறது.

தீபாவளி பண்டிகையின் 2ம் நாள்(அக்.30) சோட்டி தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. இது பகவான் கிருஷ்ணர், நரகாசுரனை வதம் செய்த நாள் என்பதால் இதனை நரக சதுர்த்தசி என்றும் கொண்டாடுகிறோம். இந்த நாள் தீபாவளி கொண்டாட்டத்திற்காக வீட்டை அலங்கரித்து, தயார் செய்வதற்கான நாளாக கருதப்படுகிறது.

தீபாவளியின் 3ம் நாள் (அக்.31) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இது ஸ்ரீராமர், ராவண வதம் முடிந்த சீதை மற்றும் லட்சுமணருடன் அயோத்திக்கு திரும்பிய நாளாக கருதுப்படுகிறது. தீமை அழிக்கப்பட்டு, நன்மை வெற்றி பெற்றதை கொண்டாடும் நாளாகும். இந்த நாளில் வீடுகள் முழுவதும் அகல் விளக்குகள் ஏற்றி, வண்ண வண்ண கோலமிட்டு கொண்டாடுவார்கள். மாலையில் லட்சுமி மற்றும் விநாயகர் பூஜை செய்து லட்சுமி தேவியின் அருள் வேண்டி வழிபாடு நடத்துவது வழக்கம்.

தீபாவளிக்கு மறுநாள்(நவ.2) கோவர்த்தன பூஜை செய்து வழிபடுவது உண்டு. இது இந்திரன் பெரு மழையாக பெய்த போது கோவர்த்தன மலையை குடையாக பிடித்து, கோகுலத்தில் வசித்தவர்களை கிருஷ்ணர் காப்பாற்றியதை நினைவுபடுத்தும் விதமாகவும், கோவர்த்தன மலைக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் செய்யப்படும் வழிபாட்டு நாளாகும். இந்த நாளில் கோவர்த்தன மலையை தாங்கிய படி இருக்கும் கிருஷ்ணரை வழிபடுவது வழக்கம்.

தீபாவளியின் கடைசி நாள் (நவ.3)பாய் தூஜ் ஆக கொண்டாடப்படுகிறது. பவு தீஜ், பையா தூஜ் என பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த திருநாளில் சகோதர, சகோதரிகளின் உறவு பலப்படப்பட வேண்டி சிறப்பு பூஜைகள் செய்து பெண்கள் வழிபடும் நாளாகும். தங்களின் சகோதரர்களின் நலனுக்காகவும், தங்களின் உறவு எப்போதும் இணை பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் செய்யப்படும் பூஜையாகும்.

Readmore: நாடே அதிர்ச்சி!. 250 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!. மக்கள் அச்சம்!

English Summary

Why Diwali is celebrated for 5 days!. This is the reason!

Kokila

Next Post

ஐபிஎல் 2025 மெகா ஏலம்..!! டெல்லி அணியில் இருந்து விலகல்..? ரிஷப் பந்துக்கு குறிவைத்த ஆர்சிபி..!!

Fri Oct 25 , 2024
Virat Kohli's Royal Challengers Bangalore are planning to take Rishabh Pant if he comes to the auction.

You May Like