fbpx

ஏன் பள்ளிக்கு வரல?. திட்டிய முதல்வரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த +2 மாணவன்!. ம.பி.யில் அதிர்ச்சி!

Madhya Pradesh: மத்திய பிரதேசத்தில் சரிவர பள்ளிக்கு வராததை தட்டிக்கேட்ட முதல்வரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துவிட்டு 12ம் வகுப்பு மாணவன் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் சத்தார்பூர் நகரில் உள்ள தமோரா அரசு உயர்நிலை பள்ளி இயங்கிவருகிறது. இந்த பள்ளியின் முதல்வராக எஸ்.கே. சக்சேனா (வயது 55) பணிபுரிந்துவருகிறார். இந்தநிலையில், இங்கு பயிலும் 12ம் வகுப்பு மாணவன், சரிவர பள்ளிக்கு வராமல் இருப்பதை வாடிக்கையாக வைத்து வந்துள்ளார். சம்பவத்தன்று, வாசலில் நின்றிருந்த மாணவனை கண்ட முதல்வர், இதுகுறித்து விசாரித்து மாணவனை திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மாணவன், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து முதல்வரை சுட்டுவிட்டு தப்பியோடியுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உத்திரப்பிரேத எல்லையில் வைத்து கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Readmore: பதிவுத் துறையில் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் கடந்த நவம்பர் மாதத்தில் 1,984 கோடி ரூபாய் வருவாய்…!

Kokila

Next Post

28 வயது இளைஞரின் உல்லாசத்தில் மயங்கிய கள்ளக்காதலி..!! கொஞ்சம் கூட யோசிக்காமல் கணவரை தீர்த்துக் கட்டிய 44 வயது மனைவி..!!

Sat Dec 7 , 2024
The incident in which a 44-year-old wife, along with a 28-year-old murderer, killed her husband while he was out for a walk, has caused a stir.

You May Like