fbpx

பிரதமர் மோடியின் சென்னை நிகழ்ச்சிகளில் அண்ணாமலை ஏன் பங்கேற்கவில்லை..? இதுதான் காரணமா..?

சென்னையில் பல்வேறு முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கவும், பல புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் பிரதமர் மோடி இன்று மதியம் சென்னை வந்திருந்தார்.. ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம், சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.. விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவரை வரவேற்றனர். இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்..

பின்னர் விமானப் படை சென்னை – கோவை இடையிலான ‘வந்தே பாரத்’ அதிவிரைவு ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.. இந்நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி, மத்திய இணையமைச்சர் எல். முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.. இதை தொடர்ந்து சென்னை மெரினாவில் உள்ள விவேகானந்தர் இல்லத்த்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

ஆனால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரதமர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவில்லை… ஆனால் கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், அம்மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பாஜக மாநிலத் தலைவர் பிரதமர் கலந்துகொண்ட இந்த நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.. மேலும் அதிமுக – பாஜக கூட்டணி குறித்து அண்ணாமலை அதிருப்தியை தெரிவித்திருந்தார்.. ஆருத்ரா முறைகேடு விவகாரத்தில் அண்ணாமலை, அமர் பிரசாத் ரெட்டி ஆகியோரின் பெயர்கள் அடிபடுவதாகவும், விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது..

இந்த காரணங்களால் தான் அண்ணாமலை, பிரதமர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் புறக்கணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.. ஆனால் கர்நாடக தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால் அண்ணாமலை பிரதமர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை என்ற் பாஜகவினர் தெரிவிக்கின்றனர்.. எனினும், பாஜக சார்பில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பிரதமர் பங்கேற்ற அனைத்து நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார்..

இதனிடையே சென்னை வந்துள்ள பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தவிர பிற அரசியல் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.. எனவே பிரதமரை வரவேற்க விமான நிலையம் வந்த பிரதமரை வரவேற்க அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சென்றிருந்தனர்.. ஆனால் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரை பிரதமர் சந்திக்கவில்லை…

Maha

Next Post

"என் குழந்தையை பிடுங்கி முத்தம்....." பணம் கேட்டு வறுபுறுத்திய......" பதிவிட்டு வேதனை தெரிவித்த பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா!

Sat Apr 8 , 2023
பாலிவுட் நடிகைகளில் முன்னாடி நடிகையாக வலம் வந்தவர் ப்ரீத்தி ஜிந்தா. தமிழில் உயிரே திரைப்படத்திலும் இவர் நடித்திருக்கிறார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவர் பிரீத்தி ஜிந்தா என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சில காலங்களுக்கு முன்பு திருமணம் செய்து அதன்பிறகு திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகி விட்டார். தற்போது தனது பிசினஸ் மற்றும் குடும்பம் என வாழ்ந்து வருகிறார் பிரீத்தி ஜிந்தா. இந்நிலையில் தனது இன்ஸ்ட்டாகிராம் […]

You May Like