fbpx

ரேஷன் கடையில் மோடி படத்தை ஏன் வைக்கவில்லை? நிர்மலா சீத்தாராமன் வாக்குவாதத்தால் பரபரப்பு…

தெலுங்கானா மாநிலத்தில் ரேஷன் கடை ஒன்றில் ஆய்வு நடத்திய நிர்மலா சீத்தாராமன் மோடியின் படத்தை ஏன் வைக்கவில்லை என்று மாவட்ட ஆட்சியரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தெலுங்கானாவின் காமாரெட்டி பகுதியில் ரேஷன் கடையில் மத்திய நிதி அமைச்சர் ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் மாவட்ட ஆட்சியரிடம் பேசினார். ’இங்கு மோடியின் படம் இல்லையே? நியாயவிலைக் கடையில் மோடியின் படத்தை ஏன் வைக்கவில்லை? என ஆட்சியரிடம் கேட்டார். இது தனக்கு ஏமாற்றத்தைஅளித்திருப்பதாகக் கூறினார். மாநில அரசு அளிக்கும் அரிசி மானியத்தை விட மத்திய அரசு அதிகமாக மானியம் அளிக்கும் நிலையில் பிரதமரின் படத்தை ஏன் நியாயவிலைக் கடைகளில் வைக்கக்கூடாது ? எனவும் கேள்வி எழுப்பினார்.

முன்னதாக தெலுங்கானா வந்த நிர்மலா சீதாராமனின் காரை இளைஞர் காங்கிரஸ் கட்சி  முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலையில்லா திண்டாட்டம், பொருளாதாரத்தில் மந்தநிலை , விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவத்தைத் தொடர்நது கே.டி.ராமாராவ் அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார். மத்திய அரசுக்கு மாநிலம் வழங்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் வெறும் 46 பைசாதான் திரும்பக் கிடைக்கின்றது. என நிர்மலா சீதாராமன் பேசியதை சுட்டிக் காட்டி பதிலளித்தார்.

சிலிண்டரில் மோடியின் படம்

ரேஷன் கடையில் மோடியின் படம் வைக்கவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் , சிலிண்டர் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் மோடியின் படத்தை சிலிண்டரில் ஒட்டி டி.ஆர்.எஸ்.கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.  நிர்மலா சீதாராமனை விமர்சிக்கும் வகையில் டி.ஆர்.எஸ். கட்சியினர் கண்டனம் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Post

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ. 45 லட்சம் அபராதம்.. இதுதான் காரணம்..

Sat Sep 3 , 2022
தரிசனத்திற்கு அனுமதி வழங்காமல் 17 ஆண்டுகளாக பக்தர்களை அலைக்கழித்த திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ. 45 லட்சம் அபராதம் விதித்து சேலம் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.. சேலம் மாவட்டம், அழகாபுரத்தை சேர்ந்த கே.ஆர்.ஹரிபாஸ்கர் என்பவர் கடந்த 2006-ம் ஆண்டு ஜூன் மாதம், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் (மேல் சாத்து வஸ்திர சேவை என்ற தரிசனத்திற்காக (இரு நபர்) ரூ.12,250/- பணம் கட்டிப் பதிவு செய்துள்ளார். ஆனால், அந்த நபருக்கு தரிசனத்திற்கு […]

You May Like