fbpx

துடி துடிக்க கொலை.! திருநங்கையாக மாறிய கணவன்.! தீர்த்துக் கட்டிய மனைவி.!

தெலுங்கானா மாநிலத்தில் திருநங்கையாக மாறிய கணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக அந்த நபரின் மனைவி மற்றும் கூலிப்படையினரை காவல்துறை கைது செய்துள்ளது. கணவரால் வேலை இழந்த ஆத்திரத்தில் கூலிப்படையினரை ஏவி கணவரை கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

தெலுங்கானா மாநிலம் சித்திபேட் பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் கணக்காளராக பணியாற்றி வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு குழந்தை ஒன்றும் இருக்கிறது.. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டில் அவரது கணவர் திருநங்கையாக மாறி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அந்த பெண் தனது கணவரை விட்டு விலகி யோசித்து வந்துள்ளார்

தனது எதிர்காலம் மற்றும் குழந்தையின் எதிர்காலத்திற்காக கணவரை விட்டு விலகி வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த திருநங்கை கணவர் அந்தப் பெண் வேலை செய்யும் பள்ளிக்கு சென்று தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த பெண் தனது கணவரை கொலை செய்ய முடிவு செய்தார். இதற்காக கூலிப்படையினருக்கு நான்கு லட்சம் ரூபாய் கொடுத்து தனது கணவரை கொலை செய்ய முடிவு செய்து இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து கூலிப்படையைச் சேர்ந்த இரண்டு நபர்கள் அவரது திருநங்கை கணவருக்கு சாராயம் வாங்கி கொடுத்து குடிக்க வைத்து அவர் மயக்கம் அடைந்ததும் தலையணையால் முகத்தை அழுத்தி படுகொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் உண்மை வெளியானதை தொடர்ந்து அந்தப் பெண் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

Next Post

பெண்களே..!! நாளைய தினமே உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.1,000 வந்துவிடும்..? வெளியான சூப்பர் குட் நியூஸ்..!!

Mon Jan 8 , 2024
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவற்றுடன் சேர்த்து ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதேசமயம் பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி வருவதால் ஜனவரி 10ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. மேல்முறையீடு […]

You May Like