கேரள மாநிலம் பத்தனம்திட்டா அடுத்துள்ள அருண் பகுதியைச் சேர்ந்தவர் உன்னி (40). இவரது மனைவி நீது(33) இவர்களுக்கு கடந்த 2011 ஆம் வருடம் திருமணம் நடந்தது இந்த தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில், அழகாக இல்லை என்று தெரிவித்து மனைவியை கணவர் உண்ணி அடிக்கடி அடித்து கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கோபித்துக் கொண்டு அடிக்கடி தாய் வீட்டுக்கு செல்வதை நினைத்து வழக்கமாகக் கொண்டுள்ளார். அதன் பிறகு மாமியார் வீட்டுக்கு சென்று கணவர் சமாதானம் செய்து மனைவியை வீட்டுக்கு அழைத்து வருவார். ஆனால் அதன் பிறகு மறுபடியும் நீதுவை உன்னி அடித்து சித்திரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
நாட்கள் செல்ல, செல்ல உண்ணியின் நடவடிக்கை மோசம் அடைந்து மனைவிக்கு உணவு கூட கொடுக்காமல் கொடுமைப்படுத்தி வந்திருக்கிறார். கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் திறக்க இருக்கின்ற நிலையில் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட எதையும் வாங்கி கொடுக்கவில்லை. இதனால் மனமுடைந்து போன நீது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதற்கு நடுவே மகளின் தற்கொலைக்கு மருமகன் உன்னி தான் காரணம் என்று தெரிவித்து நீதுவின் பெற்றோர் அரூர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினர். இந்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் உன்னியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.