fbpx

மனைவி இரண்டாவது முறை உறவிற்கு வரவில்லை.. கணவர் செய்த கொடூரம்..!

உத்தரபிரதேச மாநில பகுதியில் அம்ரொஹா மாவட்டத்தில் முகமது அன்வர் (34) என்பவர் தனது மனைவி ருக்‌ஷருக்கும் (30) வசித்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி ஒடபது வருடங்களாகிய நிலையில், மூன்று குழந்தைகள் உள்ளனர் . அன்வர் அவரது வீட்டின் கீழ் தளத்தில் சொந்தமாக பேக்கரி வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், சென்ற திங்கட்கிழமை இரவு அன்வர் தனது மனைவி ருக்‌ஷருடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். பின்னர் மனைவி உறங்கியுள்ளார். மீண்டும் சிறிது நேரத்தில் உறவுக்கு வருமாறு அன்வர் மனைவியை அழைத்துள்ளார். அதற்கு மனைவி மறுத்ததால், ஆத்திரமடைந்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

கொன்ற பிறகு அடையாளம் தெரியாமல் இருக்க கொலை செய்த தனது மனைவியின் தலை முடியை வெட்டி, உடலை பிளாஸ்டிக்கில் போட்டு கட்டிய அன்வர் அதை தனது பகுதியில் இருந்து 50 கிலோமீட்டர் தொலையில் இருக்கும் ரதுபுரா என்கிற கிராமத்திற்கு சென்று மறைவான பகுதியில் வீசியுள்ளார். மறுநாள் காலை மனைவி காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

காவல்துறையின் விசாரணையில் இவர் கொலை செய்த கொடூரம் வெளியானது. மேலும், அன்வரின் சகோதரன் டேனிஷ் என்பவரும் மனைவியின் கொலைக்கு உடந்தையாக இருந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் கணவர் மற்றும் சகோதரர் டேனிஷை கைது செய்து, இருவரையும் சிறையில் அடைத்தனர்.

Rupa

Next Post

திருமணம் நடைபெற வேண்டிய நாளில் புதுமன தம்பதிகளுக்கு நிகழ்ந்த சோகம்..!

Sat Dec 10 , 2022
கேரள மாநில பகுதியில் உள்ள கொல்லம் அருகே பரவூரில் வினுகிருஷ்ணன் என்பவர் துபாயில் பணிபுரிந்து வருகின்ற நிலையில்  பாரிப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சாந்த்ரா என்ற பெண்ணை திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இன்று இருவருக்கும் திருமணம் நடப்பதாக இருந்த நிலையில் நேற்று இருவரும் அருகில் உள்ள ஒரு பாறை குளத்திற்கு சுற்றி பார்க்க சென்றுள்ளார். அங்கே போட்டோ எடுப்பதற்காக 150 அடி உயரத்தில் உள்ள பாறையின் மீது ஏறி எடுக்க […]

You May Like